Rachitha Mahalakshmi : மாடர்ன் அவுட் ஃபிட்டில் கெத்து காட்டும் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி !

சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

 
rachitha in black dress photos

நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் அறிமுகமானார்.அந்த சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.அதையடுத்து சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியாக மக்களின் மனதை கவர்ந்துவிட்டார். 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை மீனாட்சியாக நடித்து வந்தார். சின்னத்திரை பிரபலம் ரியோவுடன் இணைந்து சரவணன் மீனாட்சி சீசன் மூன்றிலும் மீனாட்சியாக நடித்தார். இந்த சீரியல் 2016 ஆம் முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது.

சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர், இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் ஆகிய சீரியல்களில் நடித்து வந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் சீரியலுக்கு பிறகு எந்த சீரியலிலும் ரச்சிதா நடிக்கவில்லை.

விஜய் டிவியில் டாப் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 6 -இல் போட்டியாளராக கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ரச்சிதா 91 வது நாள் எலிமினேட் ஆனார்.அதன் பின்பு பிக்பாஸ் கொண்டாட்டம் மற்றும் ஓ சொல்றியா ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

rachitha photos

நடிகை ரச்சிதா மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். விதவிதமாக போட்டோ ஷூட் செய்து பதிவிட்டு வருகிறார். ட்ரெடிஷ்னல் லுக்கில் புகைப்படங்களை பகிரும் ரச்சிதா லேட்டஸ்டாக மாடர்ன் உடையில் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.இந்த போட்டோ ஷூட்டில் கருப்பு நிற உடையில் பார்க்க கெத்தாக இருக்கிறார். உடைக்கு ஏற்றப்படி போல்ட் மேக்கப்பையே தேர்ந்தெடுத்திருக்கிறார். விதவிதமான போஸில் ரசிக்க வைக்கிறார் ரச்சிதார். இந்த படங்கள் பல ஆயிரம் லைக்குகளை குவித்து வருகிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP