herzindagi
image

கர்ப்ப காலத்தில் உடல் சோர்வாகிறதா? கர்ப்பிணிகள் மறக்காமல் இந்த உணவுகளைச் சாப்பிடுங்க!

கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய உடல் சோர்வைத் தவிர்க்க வேண்டும் என்றால், கர்ப்பிணிகள் சில உணவு முறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
Editorial
Updated:- 2025-11-21, 00:06 IST

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்களின் வாழ்க்கையிலும் மிகவும் இன்றியமையாதது. பெண்கள் தங்களைக் கவனித்துக் கொள்வதோடு வயிற்றில் வளரக்கூடிய குழந்தைகளின் மீது அதீத கவனம் மற்றும் அக்கறையுடன் இருப்பார்கள். இருந்தப்போதும் கரு வளர்ச்சியடையும் முதல் மூன்று மாதங்கள் முதல் ஐந்து மாதங்கள் வரை, என்ன சாப்பிட்டாலும் வாந்தி மற்றும் மயக்கம் அதிகளவில் இருக்கும். இதனால் உடல் சோர்வும் ஏற்படும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் பிடிக்கின்றதோ? இல்லையோ? கட்டாயம் ஏதாவது உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதோ இன்றைக்கு கருவில் குழந்தைகள் பாதுகாப்புடன் வளர்வதற்கும் கர்ப்பிணிகள் ஆரோக்கியமாக இருக்கவும் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

  • கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் 2 முதல் 3 லிட்டர் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.எந்தளவிற்கு தண்ணீர் அதிகம் குடிக்கிறீர்களோ? அந்தளவிற்கு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். போதுமான அளவிற்கு தண்ணீர் இருந்தால் மட்டுமே கருவைச் சுற்றியுள்ள பாதுகாப்பு திரவத்தை பராமிக்க உதவுகிறது. மேலும் செரிமான அமைப்பு சீராக இருக்கும்.
  • பால்: கர்ப்ப காலத்தில் கருவில் உள்ள குழந்தைகளுக்கு கால்சியமும், வைட்டமின்களும் அதிகளவில் தேவைப்படும். எனவே தினமும் குறைந்தது காலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு கிளாஸ் பால் கட்டாயம் குடிக்க வேண்டும்.
  • வைட்டமின் பி6, ஏ, சி மற்றும் கே மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பச்சைக் காய்கறிகள் மற்றும் பயறு வகைகளைக் கட்டாயம் உட்கொள்ள வேண்டும். இந்த உணவுகள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதோடு, எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

மேலும் படிக்க: கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருக்க சியா விதைகள் பயன்படுத்தும் முறைகள்

  • கருவில் வளரக்கூடிய குழந்தைகளுக்கு மற்றும் கர்ப்பிணிகளுக்கு துத்தநாகம், பொட்டாசியம், கால்சியம், மற்றும் நார்ச்சத்துக்கள் தேவைப்படும் என்பதால் பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற உலர் பழங்களைக் கட்டாயம் உட்கொள்ள வேண்டும் .
  • இதே போன்று புரதம் நிறைந்த முட்டை, பருப்பு வகைகள், ஒமேகா 3 சத்துக்கள் கொண்ட மீன்கள் , சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றைக் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • காலை உணவாக காய்கறிகளுடன் கூடிய ரவா உப்புமா, வேகவைத்த முட்டை, காய்கறி ஆம்லெட், உளுந்தக் களி, கேப்பை களி போன்றவற்றைக் காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க: இயற்கையாக கருத்தரிக்க சிறந்த வழிகள் இவை தான். தம்பதிகள் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

  • இதே போன்று மதிய உணவாக சாதம், புரோட்டின் நிறைந்த காய்கறிகள், சிக்கன், மட்டன், மீன் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும். இரவில் எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால் மட்டுமே கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்துடனும், கருவில் உள்ள குழந்தைகள் நல்ல வளர்ச்சியுடன் இருப்பதற்கு பேருதவியாக இருக்கும்.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com