
Today Gold Price: கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை, இன்றைய தினம் சற்று குறைந்துள்ளது. இதனால், தங்க நகை வாங்க வேண்டும் என்ற விருப்பம் கொண்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
கடந்த பல மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ச்சியான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. குறிப்பாக, வரலாறு காணாத வகையில் உச்சத்தையும் தொட்டது. இதனால் தங்க நகை வாங்கும் விருப்பம் கொண்ட சாமானிய மக்கள் சிரமத்துக்குள்ளாகி இருந்தனர். இதன் விளைவாக, தங்கத்தின் விலை எப்போது குறையும் என்று பலரும் காத்திருந்தனர். அந்த வகையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
24 கேரட் தங்கத்தின் விலை இன்று ரூ. 180 குறைந்து காணப்படுகிறது. நேற்று, ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 13,653-ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ. 13,473 என விற்பனை ஆகிறது. மேலும், 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,07,784 எனவும், 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,34,730 எனவும், 100 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 13,47,300 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: இனி வெள்ளி நகைகளுக்கு பாலிஷ் போட கடைக்கு செல்ல வேண்டாம்; வீட்டிலேயே நகையை சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்
சென்னையை பொறுத்த வரை, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 165 குறைந்துள்ளது. இதன் மூலம் நேற்று ரூ. 12,515 என விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் 22 கேரட் தங்கம், இன்று ரூ. 12,350 என விற்பனை ஆகிறது. மேலும், 8 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 98,800 எனவும், 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,23,500 எனவும், 100 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 12,35,000 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், 18 கேரட் தங்கத்தின் விலையும் இன்று ரூ. 140 குறைந்துள்ளது. அதன்படி, நேற்று ஒரு கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 10,400 என விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ. 10,300 என விற்கப்படுகிறது. மேலும், 8 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 82,400 எனவும், 10 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,03,000 எனவும், 100 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ. 10,30,000 எனவும் விற்பனை ஆகிறது.
மேலும் படிக்க: தங்க நகைகள் எப்போதும் போல புதிதாக தெரியணுமா? இதோ உங்களுக்கான சில ஐடியாக்கள்!
தொடர்ந்து அதிகரித்துக் காணப்பட்ட வெள்ளியின் விலையும் என்று குறைந்திருக்கிறது. நேற்றைய தினத்தை விட இன்று வெள்ளியின் விலை ரூ. 4 குறைந்துள்ளது. இதன் மூலம் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 211 என விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று குறைந்திருப்பதால், இன்று தங்க நகை வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நகை மட்டுமின்றி தங்கத்தில் முதலீடு செய்வதற்கும் பலர் தற்போதைய சூழலில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com