
சன் டிவியில் ஒளிப்பரப்பான ரோஜா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் பிரியங்கா நல்காரி. கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட பிரியங்கா, குழந்தை நட்சத்திரமாக கன்னட படங்களில் அறிமுகமானார். பின்பு ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். அதன் பின்பு தமிழிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்க தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் நடித்தார். வெள்ளித்திரையில் இருந்து தமிழ் சின்னத்திரைக்கு ரோஜா சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தார். ரோஜா சீரியல் சன் டிவியில் 1000 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்தது.
அர்ஜூன் - ரோஜா ஜோடி இணையத்தில் படு வைரலானது. இவர்களுக்காகவே இந்த சீரியலை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வந்தனர். ரோஜா சீரியல் தொடர்ந்து டிஆர்பியில் கலக்கி வந்தது. இந்நிலையில் கடந்தாண்டு ரோஜா சீரியல் முடிக்கப்பட்டது. இந்த சீரியலில் அர்ஜூனாக நடித்த சிபு சூர்யன் விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் பக்கம் சென்றார். பிரியங்கா நல்காரி, ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் நடிக்க தொடங்கினார்.
இந்த சீரியலில் சீதா என்ற லீட் ரோலில் பிரியங்கா நல்காரி நடித்து வந்தார். 8 மாதங்கள் சீரியல் வெற்றிக்கரமாக பயணித்து கொண்டிருந்த நிலையில், பிரியங்கா நல்காரி திடீரென்று சீரியலை விட்டு விலகினார். அதற்கு காரணம் அவரின் கல்யாணம். சில மாதங்களுக்கு முன்பு தனது நீண்ட நாள் காதலர் வர்மாவை பெற்றோர் சம்மத்துடன் கரம் பிடித்தார். இவர்களின் திருமணம் மலேசியா முருகன் கோயிலில் நடைப்பெற்றது. திருமணத்தின் போது சில நாட்கள் சீரியலில் இருந்து ஓய்வு எடுத்தவர், திடீரென்று சீரியலை விட்டு விலகினார். இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது.

சீதா ராமன் சீரியலில் தற்போது பிரியங்காவுக்கு பதில் நடிகை ஸ்ரீ பிரியங்கா நடித்து வருகிறார்.இவர் மிக மிக அவசரம் திரைப்படத்தில் நடித்தவர். பிரியங்கா நல்காரி சீரியலை விட்டு விலகி 2 மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழில் புதியதாக தொடங்கப்படவுள்ள நளதயமந்தி தொடரில் லீட் ரோலில் பிரியங்கா நல்காரி நடிக்கவிருக்கிறார் என தகவல் பரவி வருகிறது. இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் நந்தா நடிக்கவுள்ளாராம். இவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் கண்ணே கலைமானே தொடரில் இருந்து விலகினார்.
தற்போது இவர்கள் இருவரும் இணைந்து புதிய தொடரில் நடிக்கவிருக்கின்றனர். ஜீ தமிழில் ப்ரைம் டைமில் இந்த சீரியல் ஒளிப்பரப்பாகவுள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்கா நல்காரி மீண்டும் நடிக்க வந்ததில் அவரின் ரசிகர்கள் செம்ம ஹேப்பி.
இதுப்போன்ற சினிமா பதிவுகளுக்கு லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Instagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com