herzindagi
suntv serial actress news tamil

Sruthi Shanmuga Priya : நாதஸ்வரம் சீரியல் நடிகையின் கணவர் திடீர் மரணம் அதிர்ச்சியில் சின்னத்திரை!

சன் டிவியில் ஒளிப்பரப்பான நாதஸ்வரம் சீரியலில் நடித்த நடிகை ஸ்ருதி சண்முகப் பிரியாவின் கணவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இது சின்னத்திரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Editorial
Updated:- 2023-08-04, 10:05 IST

சன் டிவியில் ஒளிப்பரப்பான சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல் நாதஸ்வரம். இயக்குனர் திருமுருகன் இயக்கிய இந்த சீரியலில் நிறைய புதுமுகங்கள் நடித்திருந்தனர். அதில் ஸ்ருதி சண்முக பிரியாவும் ஒருவர். இந்த சீரியல் நடிக்கும் போது ஸ்ருதி பள்ளியில் படித்து கொண்டிருந்தார். இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல்களிலும் நடித்தார். வாணி ராணி, பாரதி கண்ணம்மா என இவர் நடித்த சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.ஒருபக்கம் கல்லூரி படிப்பு மறுபக்கம் சீரியல் என பிஸியானார். இந்நிலையில் ஸ்ருதி, கடந்த ஆண்டு மே மாதம் தனது நீண்ட நாள் காதலரை மணந்தார். 

ஸ்ருதி சண்முகப் பிரியாவின் கணவர் அரவிந்த் ஒரு பாடி பில்டர் ஆவார். அது இல்லாமல் ஜிம் ட்ரெயினராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்தாண்டு இவர்களின் திருமணம் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. சின்னத்திரை நடிகர், நடிகைகள் பலரும் இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டனர்.  திருமணத்திற்கு பிறகு இருவரும்  ஜோடியாக நிறைய ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வந்தனர். 

இவர்களின் ரீல்ஸ் வீடியோக்களுக்கு தனிப்பட்ட ஃபேன்ஸ் கூட்டம் உள்ளது.  கடந்த மே மாதம் இவர்கள் தங்களது முதலாமாண்டு திருமன நாளை சிறப்பாக கொண்டாடி இருந்தனர். அந்த புகைப்படங்களும் இன்ஸ்டாவில் வெளியாகி இருந்தன. இந்நிலையில், ஸ்ருதி சண்முகப் பிரியாவின் கணவர், அரவிந்த் திடீரென்று மாரடைப்பில் இறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

stuthi shamuga priya

நேற்றைய தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அரவிந்த் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.  கல்யாணம் ஆன ஒரு வருடத்தில் இப்படியொரு  ஒரு துயரம் நடந்திருப்பது சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமில்லை பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் என அனைவரும் இப்போது ஸ்ருதிக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து தைரியமாக இருக்கும்படி ஆறுதல் கூறி வருகின்றனர். 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

 

 Images Credit: Instagram 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com