தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், தேவதர்ஷினி, சஞ்சனா, கீதா கைலாசம், பால சரவணன், காளி வெங்கட் நடித்திருந்த லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அந்த வாரம் நந்தன், கோழிப்பண்ணை செல்லத்துரை, கடைசி உலகப் போர் ஆகிய படங்கள் வெளியான நிலையில் லப்பர் பந்து திரைப்படம் அதிரி புதிரியான வெற்றியை பெற்றுள்ளது. இந்த நிலையில் அப்படத்தின் ஓடிடி உரிமம், வெளியீட்டு தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள காரணத்தால் பல ஓடிடி தளங்கள் இப்படத்தை வாங்க போட்டி போட்டுள்ளன. எந்த ஓடிடி தளம் உரிமையை பெற்றது என்பதை பார்க்கலாம்.
மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் லப்பர் பந்து திரைப்படம் 25 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 5 கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில் லப்பர் பந்து படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் பெற்றுள்ளது. டிவி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது. கடும் போட்டி நிலவிய நிலையில் விஜய் டிவி அதிக தொகைக்கு இப்படத்தை வாங்கியதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வியப்பான விஷயம் என்னவென்றால் முதல் வாரத்தை விட இரண்டாவது வாரம் லப்பர் பந்து அதிக வசூலை ஈட்டிக் கொடுத்துள்ளது.
செப்டம்பர் 20ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் மூன்றாவது வாரத்தில் உள்ளது. தியேட்டரில் வெளியான ஒரு மாதத்திற்கு பிறகே ஓடிடியில் படம் வெளியிடப்படும் என்ற ஒப்பந்தம் தமிழ் சினிமாவில் உள்ளது. மேலும் இப்படம் திரையரங்குகளில் இன்னும் சில வாரங்கள் தொடர வாய்ப்புள்ளதால் 6 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாகும் எனத் தெரிகிறது. தீபாவளி சிறப்பு திரைப்படமாகவும் விஜய் டிவி லப்பர் பந்தை ஒளிபரப்ப வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெரியளவில் அடிதடி, சண்டைக் காட்சிகள் இல்லாத குடும்ப படமாக லப்பர் பந்து அமைந்து இருக்கிறது.
#LubberPandhu - BLOCKBUSTER💥💥💥
— Fully Films (@Reviews_Twee1t) October 4, 2024
The movie has minted around 25crs at the box office!!!
Made in a budget of around 5cr. And Satellite and TV rights have been sold at a handsome price. it has become a mega profitable venture for the producers!!
Satellite Rights: #VijayTV
OTT… pic.twitter.com/dStqzlcXDc
லப்பர் பந்து படத்தின் வெற்றிக்கு பிறகு ஹரீஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஹீரோயின் சஞ்சனா ஆகியோரின் மார்க்கெட் இரட்டிப்பாகியுள்ளது. ஹரீஷ் கல்யாணை வைத்து படங்கள் இயக்க தயாரிப்பாளர்கள் மல்லுக்கட்டுகின்றனர். அட்டகத்தி தினேஷிற்கும் பல வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஹீரோயின் சஞ்சனாவின் கால்ஷீட்டை பெறவும் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com