herzindagi
image

புதுமண தம்பதிகளுக்கு நடத்தும் தாலி பிரித்து கோர்க்கும் சடங்கின் முக்கிய அம்சங்கள்

தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு என்பது புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு நடத்தப்படும் முக்கிய நிகழ்வாகும். 1 அல்லது 3வது மாதத்தில் இந்த நிகழ்வு நடத்தப்படும். இந்த சடங்கில் நடக்கும் முக்கிய அம்சங்களைப் பற்றி பார்க்கலாம்.
Updated:- 2025-07-23, 22:49 IST

திருமணமான புது தம்பதிகளுக்கு நடத்தப்படும் சடங்குதான் தாலி பிரித்து கோர்க்கும் முறை. இதை குறிப்பாகத் திருவாதிரை, ஆடி பெருக்கு மற்றும் மீனாட்சி திருக்கல்யாணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில், புது மணத்தம்பதிகளுக்கு செய்வார்கள். அதுமட்டுமின்றி நல்ல நாள் குறித்து தாலி பிரித்து கோர்க்கும் சடங்கு செய்யப்படும். பெண்ணின் திருமண வாழ்க்கையில் இந்த சடங்கு மங்களகரமாக ஒரு நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இது பெண்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தரும் விதமாக இருக்கிறது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு முறைகளில் செய்யப்படுகிறது.

 

மேலும் படிக்க: திருமணத்தன்று சுப முகூர்த்தத்தில் பெண்கள் கூரை பட்டு அணிந்து தாலி ஏற்றுக்கொள்வது ஏன் தெரியுமா?

தாலியில் என்னென்ன உருக்கள் இருக்க வேண்டும்

 

முன்பெல்லாம் திருமாங்கல்யத்தில், இரண்டு குண்டுகள் மட்டுமே இருக்கும். பிறகு காசு மணி, அரை காசு மணி, வாழை சீப்பு, மாங்காய், பவளம் மற்றும் கருகுமணி போன்றைவைகள் கோர்க்கப்படுகின்றன. புதுப்பெண்கள் மனதில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் தாலியை வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பிரித்து கோர்ப்பது வழக்கமாக கொண்டு இருக்க வேண்டும், அடிக்கடி தாலி மாற்றுவது நல்லது அல்ல.

south thali changing ceremony 1

 

புதுதாலி உருக்களின் எண்ணிக்கைகளில் எவ்வளவு இருக்க வேண்டாம்

 

புதுத்தாலியில் எத்தனை வேண்டுமென்றாலும் கோர்த்துக் கொள்ளலாம். ஆனால் ஒற்றைப்படை இலக்க எண்களாக இருக்க வேண்டும். உதாரணமாக 3, 5, 7 மற்றும் 9 என ஒரு இலக்க எண்களின் வரிசைப்படி தான் உருக்கள் இருக்க வேண்டும். மாமியார் வீட்டில் என்ன முறையில் தாலி கயிறு அணிவார்களோ அந்த வகையில் தாலி மாற்ற வேண்டும். குறிப்பாக தாலி மாற்றும் சடங்கை செய்வது மணமகனுடன் பிறந்த சகோதரிகள் செய்வார்கள்.

குலத்திற்கு ஏற்றவாறு தாலி அமைப்பு

 

ஒவ்வொரு குலத்திற்கு ஏற்றவாறு தாலி அமைப்பு வேறுபடுகின்றது. அதேபோல் தாலியில் வகைகள் உள்ளது

கருந்தாலி - கழுத்தைச் சுற்றி நெருக்கமாக அமையும்.
மஞ்சள் தாலி - நீண்டு கழுத்திலிருந்து தொங்கும்.
தங்கத்தாலி - தங்கச்சங்கிலியுடன் கோர்க்கப்பட்டு கழுத்திலிருந்து நீண்டு தொங்கும்.
தென்பகுதி வழக்கில் - பெருந்தாலி, சிறுதாலி, தொங்குதாலி, பொட்டுத்தாலி, சங்கத்தாலி, மண்டத்தாலி, ரசத்தாலி, தொப்புத்தாலி, உருண்டைத்தாலி, இருதாலி போன்ற பல தாலி வகைகள் புதுபெண்ணுக்கு போட்டு அழகு பார்ப்பார்கள்.

 

மேலும் படிக்க: சரியான துணை அமையும் வரை திருமணத்தை தள்ளிப்போடுவது சிறந்த முடிவா?

 

தமிழர் பண்பாட்டில் தாலி இருக்கு முக்கித்துவம்

 

திருமணம் என்பது மக்கள் சமுதாயப் பண்பாட்டில் ஒரு முக்கியக்கூறாக விளங்குகிறது. தாலி என்பது பெண்களின் மங்கல அணியாக விளங்குகிறது. தமிழா் சமுதாயத்தில் திருமணம் என்ற நிகழ்வில் பெண்களுக்கு கணவரால் அணிவிக்கப்படும் மங்கல அணியாகத் தாலி விளங்குகின்றது. தமிழா் பண்பாட்டின் அடையளமாகப் போற்றி வருகின்றனா்.

south thali changing ceremony 2

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com