பொதுவாகவே தீபாவளி பொங்கல் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலம் வந்தாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைவது டிவியில் ஒளிபரப்பாகும் புது திரைப்படங்கள் தான். ஒரு சில புதிய படங்கள் தியேட்டரிலும் ரிலீசாகும். அந்த வரிசையில் தீபாவளியை முன்னிட்டு பல தமிழ் படங்கள் தியேட்டரில் வெளியாக உள்ளது. மறுபுறம் தீபாவளிக்கு தமிழ் சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது படங்களாக களமிறக்குகின்றது. குறிப்பாக விசேஷ நாட்களில் சூப்பர் சூப்பர் படங்களாக ஒளிபரப்பு செய்து டிஆர்பியை அதிகரிக்க பல சேனல்கள் பிளான் செய்வார்கள். இந்த நிலையில் விஜய் டிவியும் சன் டிவியும் ஜீ தமிழும் இந்த வருட தீபாவளிக்கு பல சூப்பர் ஹிட் புத்தம் புதிய படங்களை ஒளிபரப்ப இருக்கிறார்கள். அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளிக்கு எந்த படங்களை எந்த சேனலில் பார்க்கலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சமீபத்தில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளியான சூப்பர் திரைப்படம் மகாராஜா. ஒரு மகள் தந்தையின் பாசத்தை கதை களமாக கொண்டுள்ள திரைப்படம் இது. இந்த படம் ஏற்கனவே நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் டிவியில் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சன் டிவியில் தீபாவளியை முன்னிட்டு 31 அக்டோபர் அன்று மாலை 6.30 மணிக்கு தனுஷ் நடித்த ராயன் படம் ஒளிபரப்பாகிறது. தனுஷ் இயக்கி நடித்த இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன் இந்த படம் தியேட்டர்களில் வெளியாகி வசூல் சாதனை செய்தது.
இந்தியன் 2:
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஜெகன், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர படையே நடிததுள்ளது . கடந்த ஜூலை மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆன இந்த படம் தற்போது வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளிக்கு கலைஞர் டிவியில் பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
மேலும் படிக்க: 2024 தீபாவளி ரிலீஸ்: திரையில் மோதும் மாஸ் நடிகர்கள், ரிலீஸாகும் தமிழ் படங்கள் இதோ!
நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்த ஆக்ஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ரிலீசான படம் டிமாண்டி காலனி 2. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். ஹாரர் திகில் படமான இது டிமான்டி காலனி முதல் பாகத்தை விட மாபெரும் வசூல் சாதனை செய்தது. இந்த படமும் தீபாவளி விருந்தாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வருகிற அக்டோபர் 31 ஆம் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com