
பண்டிகை காலம் என்றாலே திரை உலகில் மிகவும் கொண்டாட்டமான ஒரு விழாவாக மாறிவிடுகிறது. குறிப்பாக இந்த பண்டிகையை தினங்களில் பள்ளி கல்லூரி அலுவலகங்கள் விடுமுறை இருப்பதால் மக்கள் பலரும் விசேஷ நாட்களில் நடிகர்களின் திரைப்படங்களை தியேட்டரில் பார்க்க கிளம்பி விடுவார்கள். அந்த வரிசையில் தீபாவளி பொங்கல் பண்டிகைகளில் புது படங்கள் திரையரங்குகளில் வெளியாவது வழக்கம். புது ஹீரோக்களின் திரைப்படங்களும் சரி மாஸ் ஹீரோக்களின் படங்களும் சரி இந்த பண்டிகை காலத்தில் ரிலீஸ் செய்வதற்கு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தீபாவளி என்று கூறும் போது காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து வீட்டில் சமைக்கும் இட்லி கறி குழம்பு சாப்பிட்ட பிறகு ஒரு விஜய் படமோ அஜித் படமோ அல்லது ரஜினி படமும் தியேட்டரில் சென்று பார்த்த காலம் மாறி இன்று பல ஹீரோக்களின் திரைப்படங்களும் இந்த தீபாவளி நாட்களில் தான் வெளியாகிறது. ரஜினி நடிப்பில் வேட்டையன் திரைப்படம் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்துடன் திரையில் போட்டியிட ஒரு சில தமிழ் படங்கள் தயாராகி வருகிறது. எந்தெந்த திரைப்படங்கள் இந்த வருட தீபாவளிக்கு தியேட்டர்களில் வெளியாகிறது என்று இங்கு பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை சாய் பல்லவி புவன் அரோரா ஸ்ரீகுமார் லல்லு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் இந்த அமரன். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் அமரன் திரைப்படம் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாகிறது.

இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் மற்றொரு திரைப்படம் பிரதர். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன் விடிவி கணேஷ் நடிகை பூமிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நகைச்சுவை களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகர் கவின். நெல்சன் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ப்ளடி பெக்கர். இந்த திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி விஸ்வராஜ் பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நடிகர் கவின் பிச்சைக்காரனாக நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதே போல இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் இது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com