பிக்பாஸ் சீசன் 8 : ரியாவை வீட்டிலிருந்து அனுப்பிய விஜய் சேதுபதி

பிக்பாஸ் தமிழ் 8வது சீசனின் இந்த வார எவிக்‌ஷனில் வாக்குகள் அடிப்படையில் ரியா வெளியேற்றப்பட்டுள்ளார். போட்டியாளர்கள் அதிகமாக இருந்தும் டபுள் எவிக்‌ஷன் நடைபெறவில்லை.
image

பிக்பாஸ் தமிழ் 8வது சீசன் 9 ஆண், 9 பெண் போட்டியாளர்கள் என 18 பேருடன் ஆரம்பித்து அதன் பிறகு ஆறு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வருகையினால் 20க்கும் அதிகமான நபர்களோடு நடைபெற்று வருகிறது. சுவாரஸ்யத்தை கூட்டுவதற்கு 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே அனுப்பபட்ட நிலையிலும் இந்த சீசனில் சுவாரஸ்யமே இல்லை என ரசிகர்கள் கருதுகின்றனர். முதல் வாரத்தில் ஃபேட் மேன் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, நான்காவது வாரத்தில் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வருகையால் நோ எவிக்‌ஷன், ஐந்தாவது வாரத்தில் சுனிதா வெளியேற்றபட்ட நிலையில் ஆறாவது வாரத்தில் தீபக், சவுந்தர்யா, சிவகுமார், ரானவ், ரஞ்சித், சத்யா, ஜெஃப்ரி, வர்ஷினி, தர்ஷிகா, மஞ்சரி, ஜாக்குலின், ரியா, சாச்சனா என 13 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் குறைந்து வாக்குகளை பெற்ற ரியா பிக்பாஸ் வீட்டை விட்டு அனுப்பபட்டுள்ளார்.

பிக்பாஸ் ரியா தியாகராஜன்

ரியா தியாகராஜன் பிக்பாஸ் தமிழ் 8வது சீசனில் ஆறு வைல்ட் கார்டு போட்டியாளர்களில் ஒருவராக வீட்டிற்குள் வந்தவர். இவர் 2023ஆம் ஆண்டு மிக் சென்னை அழகி போட்டியில் இரண்டாமிடம் பிடித்தவர். மாடலிங் பின்னணி கொண்ட ரியா தியாகரான தனது யூடியூப் பக்கத்தில் பிக்பாஸ் ரிவ்யூ செய்து வந்தவர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வாரத்தில் வெளியில் இருந்து பார்த்த விஷயங்களை வைத்து உள்ளே போட்டியாளர்களை ரோஸ்ட் செய்ய முயற்சித்தார். வீட்டிற்குள் வந்த முதல் நாளிலேயே போட்டியாளர்கள் குறித்து தனது கருத்தை நேரடியாக வெளிப்படுத்தினார். இவருடைய கருத்தை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை. டிவியில் ஒளிபரப்படும் ஒரு மணி நேர நிகழ்வை மட்டுமே வைத்து ரியா விமர்சனம் செய்வதை புரிந்து கொண்டனர்.

பிக்பாஸ் வீட்டில் எவிக்‌ஷன் : ரியா

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் நுழைந்த அந்த வாரத்தில் புதிய வரவுகளை நாமினேட் செய்யக்கூடாது என பிக்பாஸ் அறிவித்தார். அந்த வாரம் சுனிதா வீட்டை விட்டு அனுப்பபட்டார். இந்த வாரம் ரியா தியாகராஜன் உட்பட 10க்கும் அதிகமான போட்டியாளர்கள் நாமினேட் ஆகி இருந்தனர். பள்ளி டாஸ்க்கிலும் ரியா சிறப்பாக செயல்பட்டதாக தெரியவில்லை. கேமரா முன் சில விஷயங்களை பதிய வைப்பதற்காகவே ரியா பேசி வருகிறார் என சக போட்டியாளர்கள் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் குறைந்த வாக்குகள் பெற்ற காரணத்தினால் ரியா பிக்பாஸ் வீட்டை விட்டு அனுப்பபட்டுள்ளார்.

Image source - riya instagram

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP