
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா அசாத் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. ஆங்கர் டூ சின்னத்திரை நடிகையாக மாறியிருக்கும் ஃபரீனா சிறந்த சீரியல் வில்லி என்ற விருதையும் பெற்று விட்டார். பாரதி கண்ணம்மா முதல் பாகத்தில் இவரின் நடிப்பு பாராட்டுக்களை அள்ளியது. சீரியல் டி.ஆர்.பி உயரவும் ஃபரீனா முக்கிய காரணமாக இருந்தார். பாரதி கண்ணம்மா தொடரில் நடித்த நடிகர் நடிகைகள் பலர் அந்த சீரியலை விட்டு விலகினாலும் இறுதி வரை சீரியலில் தொடர்ந்து நடித்தார் ஃபரீனா.
கர்ப்பமாக இருந்த போது சீரியலை விட்டு 6 மாத ஓய்வு எடுத்தார். பின்பு மீண்டும் கம்பேக் கொடுத்து நடிப்பில் கவனம் செலுத்தினார். ஃபரீனாவின் இந்த கடின உஅழைப்புக்காவே அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் தற்போது பாரதி கண்ணம்மா 2 வது பாகத்திலும் ஃபரீனா நடிக்கிறார். இதிலும் வில்லி வெண்பாவாக தொடர்கிறார்.
இந்நிலையில், கதைப்படி தற்போது வெண்பா தீ விபத்தில் மாட்டிக் கொள்கிறார். அதாவது, பாரதியின் அம்மாவை கொலை செய்ய அவர் இருக்கும் குடிசையில் வெண்பாவின் அண்ணன் தீ வைக்கிறார். ஆனால் அந்த குடிசையில் வெண்பாவின் அப்பாவும் இருக்க மொத்த குடும்பமும் பதறுகிறது. தனது அப்பாவை காப்பாற்றா தீயிக்குள் செல்லும் வெண்பா , பாரதி அம்மாவை காப்பாற்றி விட்டு தீயிக்குள் மாட்டிக் கொள்கிறார். அவரின் முகம் தீயில் கருகி விடுகிறது.

முகத்திற்கு தீப்பிடித்தது போல தத்ரூபமாக மேக்கப் போட்டது எப்படி? என்பதை இன்ஸ்டா வீடியோவில் ஃபரீனா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com