Serial Actress Rithika Instagram : அச்சு அசல் கேரள பெண் குட்டியாக மாறிய பாக்கியலட்சுமி ரித்திகா... இதுதான் காரணமா?

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ரித்திகா தமிழ்செல்வி தனது இன்ஸ்டாகிராமில் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் 

rithika tamilselvi husband photos

பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா ரோலில் நடித்து வந்தவர் நடிகை ரித்திகா தமிழ்செல்வி. இவர் முதன் முதலாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி தொடரில் நடித்தார். இதற்கு முன்பு தனியர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பொருளாதார தேவைக்காக பார்ட் டைம்மாக சின்னத்திரையில் கலம் இறங்கினார். ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து, சின்னத்திரை சீரியல்களில் முழு நேரமாக நடிக்க தொடங்கினார் ரித்திகா. குக் வித் கோமாளியிலும் வைல்ட் கார்டு ரவுண்டில் எண்ட்ரி கொடுத்தார். கடந்த 3 ஆண்டுகளாக பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் ரித்திகா, திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

சிறிய இடைவெளி தேவைப்பட்டதால் இந்த முடியை எடுத்திருப்பதாக தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார் ரித்திகா. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என கூறி வந்த ரித்திகா, திடீரென்று சீரியலில் இருந்து விலகி இருப்பது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ரித்திகாவின் கணவர் வினு கேரளாவை சேர்ந்தவர். விஜய் டிவியில் இயக்குனராக பணிப்புரிந்து வருகிறார். விஜய் டிவியில் தான் இவர்களின் காதல் கதை தொடங்கியதாம். கடந்தாண்டு இவர்களின் திருமணம் நடந்தது. வினுவின் தாய் மற்றும் தந்தை கேரளாவில் இருப்பதால் அமிர்தாவும் அடிக்கடி அங்கே சென்று வருவார்.

baakyalaskhmi rithika

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் சேர்ந்து முதல் ஓணம் பண்டிகையை கொண்டாடவுள்ளார் அமிர்தா. இதுக் குறித்த பதிவு ஒன்றையும் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். தனது வீட்டு வாசலில் திருவோணம் பூக்கோலம் போட்டு, பாரம்பரிய புடவையான ஓணம் கசப்பு புடவை அணிந்து மிகவும் சிம்பிளான புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்து, அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்களை பரிமாறியுள்ளார்.

எப்போதுமே ரித்திகா அதிகப்படியான புடவையை தேர்ந்தெடுத்து அணிவார். இந்த ஓணம் புடவையில் ரித்திகா, அச்சு அசல் கேரளா பெண் போலவே தெரிவதாக ரசிகர்கள் கமெண்டில் கூறியுள்ளனர். அதே போல் ரித்திகாவை சீக்கிரமாக புதிய சீரியலில் பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். ரித்திகா கர்ப்பமாக இருப்பதால் தான் சீரியலை விட்டு விலகியதாக வதந்தி ஒன்றும் இணையத்தில் பரவி வருகிறது. ஆனால் அதற்கு ரித்திகா எந்தவித விளக்கலும் இதுவரை அளிக்கவில்லை.

இதுப்போன்ற பதிவுகளுக்கு மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: Instagram
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP