வாழ்க்கையில் தெரிந்தே பல தருணங்களில் பாவம் செய்திருப்போம். இதில் தலையாய பாவம் ஒன்று உள்ளது. இந்து தொன்மவியலின்படி அந்த பாவத்திற்கு எங்கு சென்றும் பிராயச்சித்தம் தேட முடியாது. அதே போல மன்னிப்பும் கிடைக்காது. அது என்ன பாவம் ? என இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். பாவம் என்றால் தீய செயல்களை குறிப்பிடுவதற்கு பயன்படும் சொல் ஆகும். இந்த பாவத்தை பற்றி ஒவ்வொரு தலைமுறையினரும் அழுத்தம் திருத்தமாக தெரிந்து கொள்வது அவசியம். ஏனென்றால் ஒரு முறை இந்த பாவத்தை செய்த பிறகு சரி செய்ய இயலாது. வாழ்நாள் முழுவதும் அந்த பாவம் உங்களை துரத்திக் கொண்டே இருக்கும்.
தாய் தந்தையரை வயதான காலத்தில் நிராகரிக்கின்ற பாவத்திற்கு எங்கு சென்றாலும் உங்களால் பிராயசசித்தம் தேட முடியாது. இன்றைய தலைமுறையினருக்கு இதை மீண்டும் மீண்டும் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமுள்ளது. நாம் இந்த உலகில் வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் தாயும் தந்தையும். இருவரும் இன்றி இந்த உலகில் நாம் கிடையாது. அப்படியான பெற்றோரை கவனித்து கொள்வது ஒவ்வொரு பிள்ளையின் தலையாய கடமையாகும். இளமையில் உங்களை எப்படி கவனித்து கொண்டார்கள் என யோசிக்க வேண்டும்.
வயிற்றில் இருந்து வெளியே வந்த பிறகு ஒவ்வொரு நாளும் உங்கள் உடல்நலனில் கவனம் செலுத்தி பார்த்து பார்த்து பக்குவமாக பேணி காத்து வளர்த்திருப்பார்கள். அப்படி பேணி காத்த தாய் தந்தையை வயோதிக காலத்தில் பார்த்துக் கொள்ளும் கடமை பிள்ளைகளுக்கு இருக்கிறது.
நான் ஏன் பார்த்துக் கொள்ள வேண்டும் ? அவர்களே அவர்களை பார்த்துக் கொள்ள முடியாதா ? என கேட்கலாம். இது உங்களுடைய கடமை. எத்தனை குழந்தைகளை ஒரு தாய் பெற்றெடுத்தாலும் ஒவ்வொருரையும் ஒரே மாதிரியாக வளர்க்கின்றாள். அண்ணன் அல்லது அக்கா, தம்பி அல்லது தங்கை பார்த்து கொள்வார்கள் என நினைக்காமல் உங்களை எப்படி குழந்தைப் பருவத்தில் தாய், தந்தையர் வளர்த்தார்களோ அதே போல நீங்கள் அவர்களுடய வயோதிக காலத்தில் கவனித்து கொள்வது அவசியம்.
நம்மை வளர்த்த காலத்தில் தங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் கவனித்து கொண்ட அவர்களை வயோதிக கால வாழ்க்கைமுறைக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து பேணி காக்க வேண்டும். எனக்கு சொத்து கொடுக்கவில்லை அதனால் கவனிக்க மாட்டேன் என முதியோர் இல்லத்தில் விட்டுச் செல்வது கேவலமான விஷயம்.
உங்களிடம் இருப்பதை வைத்து பெற்றோருக்கு முடிந்த விஷங்களை செய்து கொடுங்கள். இவற்றை நாம் செய்ய தவறினால் பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவற்றுக்கு ஆளாகி கடுமையாக பாதிக்கப்படுவோம்.
மேலும் படிங்க சூரனை முருகப்பெருமான் வதம் செய்த "சூரசம்ஹார" வரலாறு
அதே நேரம் அவர்களை நன்றாக கவனித்து கொண்டால் புண்ணிய வாழ்வு கிடைக்கும்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com