Hair growth tips: முடி வளர்ச்சிக்கு வெளிப்புற பராமரிப்புகள் மட்டும் போதாது. நம் உடல் உள் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் தான் தலைமுடியும் ஆரோக்கியமாக வளரும். இதற்கு வைட்டமின்கள் பெரிதும் உதவுகின்றன. முடி வளர்ச்சிக்கு மிக முக்கியமான 5 வைட்டமின்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
மேலும் படிக்க: இந்த எண்ணெய் மட்டும் தான் தலை முடிக்கு யூஸ் பண்ணுவேன்; சீக்ரெட் உடைத்த ஸ்ருதி ஹாசன்
தலைமுடி வளர்ச்சிக்கு மிக முக்கியமான வைட்டமின் பயோட்டின் ஆகும். முடி வளர்ச்சிக்கு உதவும் சத்துகள் பற்றி நீங்கள் தேடியிருந்தால், அதில் பயோட்டின் முக்கிய இடத்தை பிடிப்பதை கண்டிருப்பீர்கள். இதற்கு முக்கிய காரணம் கெரட்டின் உற்பத்தியில் பயோட்டின் உதவுகிறது. கெரட்டின் என்பது தலைமுடி, தோல் மற்றும் நகங்களை உருவாக்கும் புரதமாகும். பயோட்டின் குறைபாடு ஏற்பட்டால், முடி உடைதல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
பயோட்டின் முட்டை, நட்ஸ், சால்மன் மீன், சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற உணவுகளில் இயற்கையாகவே உள்ளது. உங்கள் உணவில் போதிய பயோட்டின் இல்லாத போது, பயோட்டின் சப்ளிமெண்ட்டுகள் எடுத்துக்கொள்வது நல்ல பலனைத் தரும். இவற்றை பயன்படுத்துவதன் மூலம் முடி வலிமையாகவும், பளபளப்பாகவும் மாறுவதை சில மாதங்களிலேயே நீங்கள் காணலாம்.
வைட்டமின் ஈ உங்கள் தலைமுடிக்கு ஒரு ஸ்பா சிகிச்சை போன்றது. இது ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி செல்களுக்கு ஊட்டமளித்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும், இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்து, முடியை பளபளப்பாக மாற்றுகிறது.
பாதாம், சூரியகாந்தி விதைகள், கீரை, அவகேடோ போன்ற உணவுகள் மூலம் வைட்டமின் ஈ-ஐ உங்கள் உணவில் சேர்ப்பது நல்ல பலனைத் தரும். சிலர் வைட்டமின் ஈ எண்ணெயை நேரடியாக தலைமுடியில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலமே தலைமுடியை உள்ளிருந்தே பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.
உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் வைட்டமின் ஏ தேவைப்படுகிறது. இது முடியின் செல்களுக்கும் பொருந்தும். வைட்டமின் ஏ, சீபம் என்ற இயற்கையான எண்ணெய்யை உற்பத்தி செய்ய உதவுகிறது. இந்த எண்ணெய் உங்கள் தலைமுடியை ஈரப்பதமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் ஏ குறைபாடு ஏற்படும்போது முடி வறண்டு, பலவீனமாகி எளிதில் உடையும் வாய்ப்பு அதிகம் இருக்கும். கேரட், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, கீரை மற்றும் ஈரல் போன்ற உணவுகளில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது.
மேலும் படிக்க: சருமத்தை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த ஆயுர்வேத ஃபேஸ்பேக்கை ட்ரை பண்ணுங்க
இந்த வைட்டமின் புதிய முடி செல்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே, ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு வைட்டமின் டி அத்தியாவசியமானது. நாம் பலரும் போதுமான சூரிய ஒளியை பெறுவதில்லை. இதனால் வைட்டமின் டி குறைபாடு பொதுவாக காணப்படுகிறது. வாரத்திற்கு சில நாட்கள் 15-20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்பது வைட்டமின் டி அளவை அதிகரிக்க சிறந்த வழியாகும். மேலும், கொழுப்பு நிறைந்த மீன்கள், காளான் மற்றும் பால் பொருட்களிலிருந்தும் இதை நாம் பெறலாம். வைட்டமின் டி அளவு குறைவாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி சப்ளிமெண்ட்டுகள் எடுத்துக்கொள்வது நல்லது. இது முடி செல்களுக்கு புத்துயிர் அளித்து புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
முடி வளர்ச்சிக்கு வைட்டமின் சி பங்கு இன்றி அமையாதது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், முடி வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி உங்கள் உடலில் கொலாஜன் உற்பத்தியில் உதவுகிறது. கொலாஜன் என்பது முடியின் அமைப்பை வலுப்படுத்தும் ஒரு புரதமாகும். மேலும், இது முடி உதிர்வதைத் தடுக்கும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, குடைமிளகாய் மற்றும் ப்ரோக்கோலி போன்ற சிட்ரஸ் உணவுகளில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
இது போன்ற சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டால், முடி வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவை, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com