-1733847548157.webp)
திருவண்ணாமலை மகாதீபம் என்பது கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் நடைபெறும் தீபம் ஏற்றும் விழாவாகும். சிவன் காத்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாகக் காட்சி தந்த இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை தீபத் திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மகாதீபத்தன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் வழியாக மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து வழிபடுவார்கள். இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகச் சொல்லப்படுகிறது.
பத்தாம் நாள் அதிகாலை 4 மணி அளவில் அண்ணாமலையாருக்கு பூஜை செய்து அவருக்கு முன் பெரிய கற்புரம் வைத்து தீபம் ஏற்றுவார்கள். சிவனுக்கு ஏற்றிய இந்த தீபத்தைக் கொண்டு நந்தி பகவானுக்கு முன் பெரிய ஐந்து அகல் விளக்கு வைத்து நெய் தீபம் ஏற்றப்படும். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சன்னிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றப்படும். கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் இத்தீபம் ஏற்றுவதால் "பரணி தீபம்"என்று அழைக்கப்படுகிறது. பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுக தீபம் ஏற்றப்படுகிறது. பஞ்சமுக தீபம் என்பது 5 மடக்குகள் என்று அழைக்கப்படுகிறது, அப்படி என்றால் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில் புரியும் இறைவனின் ஐந்து திருமுகங்களைக் குறிக்கும். பரணி தீபத்தினை இறுதியாகப் பைரவர் சன்னதிக்குக் கொண்டு சென்று வைக்கப்படுகிறது வைக்கின்றனர்.

Image Credit: Google
மாலையில் மலையில் தீபம் ஏற்றுவதற்கு முன்பு கோயிலில் பஞ்சமூர்த்திகளுக்குத் தீபதரிசனம் செய்யப்படுகிறது. மலையில் தீபம் ஏற்றும் நேரம் நெருங்கியவுடன் அர்த்தநாரீஸ்வரர் தோன்றுவார் என்று நம்பப்படுகிறது. சிவபெருமான் தேவிக்கு தன்னுடைய இடப்பக்கத்தை அளித்து காட்சி தரும் நாளாகக் கூறப்படுகிறது. அதன் நினைவாக 3 நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வந்து மக்களுக்கு தரிசனம் தருகிறார். பின்பு உடனே மலையில் 6 மணிக்கு "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்ற முழக்கத்துடன் மாகதீபம் ஏற்றப்படுகிறது.
மேலும் படிக்க: கந்த சஷ்டி விரதத்தின் நிறைவு நாளில் செய்ய வேண்டிய வழிபாடு
கார்த்திகை தீப்பதன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் ஏற்றப்படுவதைப் பரணி தீபம் என்றும் மாலையில் மலையுச்சியில் ஏற்றப்படுவதை மகாதீபம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாகின்றார் என்று சொல்லப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டவை, தீபம் ஏற்ற செம்பு ,இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்ற சுமார் 3௦௦௦ கிலோவுக்கும் மேற்பட்ட நெய்யும், 10O0 மீட்டர் காடா துணியும் பயன்படுத்தி ஏற்றப்படுகிறது.
-1733847948503.jpg)
Image Credit: Google
கார்த்திகை தீப்பதன்று கிரிவலம் சென்றால் பாவவிமோசனம் கிடைக்கும் மற்றும் கர்ம வினைகளை நம்மை வீட்டுப் போக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும் படிக்க: தீபாவளி விளக்குகளை என்ன செய்யணும் தெரியுமா ? தப்பித் தவறி கூட இதை செய்யாதீங்க
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com