herzindagi
image

குழந்தைகளுக்குத் தேர்வு நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கணுமா? பெற்றோர்கள் மறக்காமல் இதை செய்திடுங்க!

சமீபத்திய ஆய்வுகளின் படி, சுமார் 16 சதவீத மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
Editorial
Updated:- 2025-11-07, 00:13 IST

குழந்தைகளுக்கு இரண்டாம் நிலை பருவத்தேர்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் எப்படி அனைத்து பாடங்களையும் படித்து முடிக்கப்போகிறோம்? தேர்வில் எப்படி அதிக மதிப்பெண்கள் பெற முடியும்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற பல்லாயிரம் கேள்விகளை குழந்தைகளின் மனதில் எழக்கூடும். முக்கியமாக தேர்வை எப்படி கையாள வேண்டும் என்ற அச்சம் அதிகளவில் எழக்கூடும். பல நேரங்களில் மதிப்பெண்கள் வருவதற்கு முன்னதாக சில குழந்தைகள் மன உளைச்சலால் தற்கொலை செய்யக்கூட முயற்சி செய்கிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். தேர்வு நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த டிப்ஸ்கள் இங்கே.

மேலும் படிக்க: குழந்தைகளிடையே அதிகரிக்கும் மன அழுத்தம்;  பெற்றோர்கள் கட்டாயம் இதை மட்டும் செய்திடுங்க!

தேர்வு பதட்டத்தைக் குறைக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது?

  • தேர்வு எழுத சொல்லும் குழந்தைகளிடம் முதலில் பெற்றோர்கள், தேர்வு என்பது வாழ்க்கையில் வரக்கூடிய ஒரு நிகழ்வு என்பதை புரிய வைக்கவும். தேவையில்லாத பதட்டம் வேண்டாம் என்றும், தோல்வியே அடைந்தாலும் அடுத்த வாய்ப்பு உள்ளது என நம்பிக்கை கொடுக்க வேண்டும்.

 

 மேலும் படிக்க: பதின்பருவ பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகளுடன் ஆரோக்கியமான உறவை மேம்படுத்த 7 எளிய வழிமுறைகள்

  • ஒருவேளை தோல்வி அடைந்துவிட்டால் வாழ்க்கையில் எதுவுமே செய்ய முடியாது என்ற மனநிலை இருந்தால் முதலில் மாற்ற முயற்சி செய்யவும். எப்போதும் நேர்மறையான எண்ணங்களை மட்டும் யோசிக்க சொல்லவும். இவையெல்லாம் மன ரீதியாக குழந்தைகளுக்கு ஒரு வித ஆறுதலைக் கொடுக்கவும்.
  • அடுத்தப்படியாக குழந்தைகளுக்கு படிப்பின் மீதான ஆர்வத்தையும், தேர்வு என்றால் என்ன? என்பது குறித்து தெளிவுப்படுத்த வேண்டும்.
  • வீட்டில் குழந்தைகளுக்குப் பிடித்தமான சூழலை உருவாக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் சண்டை, சச்சரவுகளும் இருக்காமல் பார்த்துக் கொள்ளவும். படிப்பதற்கான அமைதியான சூழல் இருந்தால் நிச்சயம் படிக்கத் தோன்றும். இதனால் தேர்வு நேரத்தில் எவ்வித பதட்டமும் ஏற்படாது.

 மேலும் படிக்க:செல்போன் தான் வேணும்; இல்லை சாப்பிட மாட்டேன்” - அடம்பிடிக்கும் குழந்தைகளை மாற்றுவதற்கான வழிமுறைகள்

  • தேர்விற்கு என்னென்ன பாடங்கள் ஒதுக்கி விடப்பட்டுள்ளதோ? அதையெல்லாம் முதலில் நன்றாக படித்துக்கொள்ள வேண்டும். நிச்சயம் அனைத்துப் பாடங்களையும் விரல் நுனியில் வைத்திருக்க முடியாது. எனவே என்னென்ன பாடங்கள் உள்ளதோ? அதையெல்லாம் கொஞ்சமாவது வாசித்துவிட்டு சொல்லும் போது தேர்வு நேரத்தில் படிக்கவில்லை என்ற கவலை இருக்காது. எனவே குழந்தைகள் படிக்கும் போது பெற்றோர்கள் இதைக் கவனிக்க வேண்டும்.
  • காலையில் 9 மணிக்குப் பள்ளிக்குச் செல்லும் போது தேர்விற்கான அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைக்க முடியாது. எனவே முந்தைய நாளே தேர்விற்கு என்னெ்ன தேவை என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும். தேர்வு நேரத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க உதவியாக அமையும். 

Image source - Freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com