herzindagi
image

தீபாவளி விளக்குகளை என்ன செய்யணும் தெரியுமா ? தப்பித் தவறி கூட இதை செய்யாதீங்க

தீபாவளிக்கு பயன்படுத்திய விளக்குகளை கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு என்ன செய்வது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். பாரம்பரியத்தின்படி விளக்குகளை மற்ற புனித சடங்களுக்கு பயன்படுத்துங்கள் அல்லது தானம் செய்யுங்கள். எக்காரணத்திற்கு தூக்கி எறியாதீர்கள். அது அமலங்கலமான செயலாகும்.
Editorial
Updated:- 2024-11-01, 08:11 IST

தீபாவளிக்கு பயன்படுத்திய விளக்குகளை கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு என்ன செய்வது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். பாரம்பரியத்தின்படி விளக்குகளை மற்ற புனித சடங்களுக்கு பயன்படுத்துங்கள் அல்லது தானம் செய்யுங்கள். எக்காரணத்திற்கு தூக்கி எறியாதீர்கள். அது அமலங்கலமான செயலாகும்.

தீபங்களின் திருவிழாவான தீப ஒளி திருநாள் எனும் தீபாவளி எல்லோருடைய வாழ்விலும் ஒளி ஏற்றி மகிழ்ச்சியை கொண்டு வந்திருக்கும். அக்டோபர் 31ஆம் தேதி வீட்டில் லட்சுமி மற்றும் வினை தீர்க்கும் விநாயகருக்கு பூஜை செய்து செல்வம், வளம், மகிழ்ச்சி, அமைதி நிலவ வேண்டியிருப்போம். இந்த கொண்டாட்டத்திற்காக வீட்டை அலங்கரித்து விளக்குகள் ஏற்றி மகிழ்ந்திருப்போம். எனினும் பண்டிகை நிறைவடைந்த பிறகு விளக்குகளை என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். அதற்கான விடையை இந்த பதிவில் பார்க்கலாம்.

தீப ஒளி கொண்டாட்டத்தில் விளக்குகளின் முக்கியத்துவம்

தீபாவளி பண்டிகைக்கு வீட்டை சுத்தம் செய்து அலங்கரிப்பது கட்டாயமான சடங்காகும். இதில் குறிப்பாக லட்சுமி பூஜை செய்யும் போது விளக்குகளை ஏற்றுவோம். விளக்குகளை ஏற்றுவது ஆன்மிக பலன்களை கொண்டது. வீட்டில் விளக்கு ஏற்றி லட்சுமியயின் ஆசியை பெறலாம். லட்சுமி தேவியை வீட்டிற்கு அழைப்பதன் மூலமாக செல்வத்தை பெருக்கலாம், எதிர்மறை ஆற்றலை அகற்றலாம்.

தீப ஒளி விளக்குகளை என்ன செய்வது ?

விவரம் தெரியாமல் பலரும் தீபாவளிக்கு பிறகு விளக்குகளை தூக்கி எறிகின்றனர். அது தவறான விஷயமாகும். தீபாவளி கொண்டாட்டத்தை கடந்தும் தீபங்கள் அல்லது விளக்குகள் முக்கியத்துவம் கொண்டவை. பல்வேறு நன்மைகளுக்காக அந்த விளக்குகளை நாம் பயன்படுத்தலாம்.

diwali diya

மேலும் படிங்க Diwali 2024 : வாழ்வில் ஒளி ஏற்றும் தீப திருநாளில் செய்ய வேண்டிய பூஜை, முக்கியத்துவம்

கோயிலில் வழிபாடு

கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் தீபாவளிக்கு பயன்படுத்திய விளக்கை அங்கு விளக்கு போடும் இடத்தில் வைத்து ஏற்றி வாழ்வில் செல்வ செழிப்பு நீடிக்க வேண்டிக் கொள்ளுங்கள்.

ஆற்றில் கரைத்தல்

தீபாவளி முடிந்த பிறகு 5 விளக்குகளை ஆற்றங்கரையில் கரைத்து எதிர்மறை ஆற்றலை அகற்றி செல்வத்தை வரவேற்கவும்.

தானம் செய்தல்

தீபாவளி விளக்குகளை கோயிலுக்கு தானம் செய்யலாம் அல்லது மட்பாண்ட உற்பத்தியாளர்களுக்கு கொடுக்கலாம். குழந்தைகளிடம் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம்.

விளக்குகளும், நிதி நிலைமையும்

நிதி நெருக்கடி, பொருளாதார சிக்கலை எதிகொள்வோர் வீட்டை சுற்றி பழையை விளக்குகளை ஏற்றலாம். எனினும் புதிய தொடக்கங்களுக்காக லட்சுமி பூஜைக்கு புதிய விளக்கு பயன்படுத்துவது நல்லது.

விளக்குகளும், சுற்றுச்சூழலும்

விளக்குகளை தூக்கி எறிவதற்கு பதிலாக மரத்தின் அடியில் புதைப்பது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செயலாகும். மேலும் இந்த செயல் ஆன்மிக முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சுற்றுச்சூழலுக்கும் விளக்குகள் நன்மை பயக்கும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.


Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com