
கந்த சஷ்டி விரதத்தின் நிறைவு நாள் இந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அமைந்திருக்கிறது. உடலை வருத்தி இருந்தாலும் மனதிற்கு தெம்பு கொடுத்து விரதத்தை கடைபிடிக்க உதவிய முருகப்பெருமானுக்கு நன்றி சொல்லுங்கள். சூரசம்ஹாரத்தின் அடுத்த நாள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். முருகப்பெருமானின் அவதாரமே சூரனை வதம் செய்வதற்காக தான். சூரசம்ஹாரத்தை நிறைவு செய்யும் வரை தனக்கு இருக்கும் சக்திகளை தள்ளிவைக்க மேல் லோகத்தில் ஒருத்தர் பூலோகத்தில் ஒருத்தர் என வள்ளி தெய்வானையை முருகப்பெருமான் தனித்தனியாக அனுப்பி வைத்தார். சூரசம்ஹாரம் முடிந்த பிறகு தேவர்கள் எல்லோரும் முருகப்பெருமானிடம் சென்று வணங்கி அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என ஆசைப்பட்டனர்.
தேவர்களின் தலைவணாகிய தேவேந்திரன் தன்னுடைய வளர்ப்பு மகளை முருகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார். நாராயணரின் கண்களில் இருந்து வந்தவர்கள் அமிர்தவள்ளி, சுந்தரவள்ளி. அவர்களே தெய்வானை, வள்ளியாக வளர்ந்தனர். இதையடுத்து நாராயணர், பிரம்மா, தேவர்கள் பேசி தெய்வானையை முருகப்பெருமான் திருப்பரங்குன்றத்தில் மணம் முடிக்க செய்தனர். வள்ளியை முருகர் காதலித்து திருமணம் செய்து திருத்தணியில் அமர்ந்தார்.

முருகனின் திருக்கல்யாண வைபவமே விரதத்தை நிறைவு செய்யும் நாளாகும். நம் வீட்டின் அருகில் உள்ள முருகர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் நிச்சயம் நடக்கும். திருச்செந்தூரில் திருக்கல்யாண வைபவம் சூரசம்ஹாரம் முடிந்த நாள் அன்றே இரவு நேரத்தில் நடைபெறும். ஆனால் நாம் பொதுவாக நவம்பர் 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் விரதம் செய்வது நல்லது.
ஷட்கோண தீபம் ஏற்றி முருகப்பெருமானை வேண்டிக்கொள்ளுங்கள். விரதத்தை கலசம் வைத்து தொடங்கி இருந்தால் நிறைவு நாளில் சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் கொண்டு நெய்வேத்தியம் செய்யவும். தீபாராதனை காண்பித்து கலசத்தை கொஞ்சம் நகற்றி வைக்கவும்.
கலசத்தில் இருக்கும் நாணயத்தை பூஜை அறையில் வைத்துவிடுங்கள். முருகர் படத்தை எடுத்த இடத்திலேயே வைக்கவும். சனிக்கிழமையன்று மாட்டுங்கள். அன்று காலை கலசத்தை எடுத்து விடுங்கள். கலச தண்ணீரை விக்ரகத்திற்கு அபிஷேகம் செய்யுங்கள். அபிஷேக தண்ணீரை கொஞ்சம் குடித்துவிட்டு வீழு முழுக்க தெளிக்கவும்.
மேலும் படிங்க சூரனை முருகப்பெருமான் வதம் செய்த "சூரசம்ஹார" வரலாறு
விரதத்திற்காக கையில் கட்டியிருந்த கயிற்றை பெரியவர்களிடம் சொல்லி அவிழ்த்து முருகனை மனதார வேண்டி கோயில் மரத்தில் கட்டுங்கள். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்கவும்.
திருமணம் வேண்டி ஜாதகத்தை முருகரின் படத்தின் அருகில் வைத்து விரதம் கடைபிடித்தவர்களின் கோயிலுக்கு அந்த ஜாதகத்தை எடுத்து சென்று முருகரின் பாதத்தில் வைத்து பூஜை செய்யுங்கள். எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கி விரைவில் திருமண வரன் அமையும்.
இதுபோன்ற ஆன்மிக கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com