
சில மாதங்களில் சில விஷயங்களை செய்யக்கூடாது என பெரியர்கள் நமக்கு சொல்லி இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தை எந்த வித நற்காரியங்களும் செய்யக் கூடாத மாதமாக பார்க்கின்றனர். ஆனால் மாதங்களில் உயர்ந்த மாதம் என்றால் அது மார்கழி மாதம். கிருஷ்ண பரமாத்மா நான் மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் என சொல்லி இருக்கிறார். பரமாத்மா மார்கழியை இப்படி குறிப்பிடுகிறார் என்றால் கட்டாயம் சிறப்பம்சங்கள் உண்டு. இந்த மாதத்தில் என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ? என்பதை பார்க்கலாம்.

மார்க்கழியில் பொதுவாக விதை விதைக்க கூடாது என்று சொல்லுவார்கள். இது விதை வளருவதற்கான காலம் அல்ல. மார்கழியில் விதை சரியான உயிர்த்தன்மை பெறாது என்ற காரணத்தால் மார்கழியில் விதைக்காதீர்கள் என கூறினர். இதை திருமணத்துடன் பொருத்தி மார்கழியில் திருமணங்கள் செய்யக்கூடாது என்றனர்.
மார்கழியில் அதிகாலைக்கு பிறகு தூங்க கூடாது. மார்கழியில் பிரம்ம முகூர்த்த நேரத்தை தாண்டியே தூங்க கூடாது. 4 - 4.30 மணிக்குள் குளிக்க வேண்டிய மாதம் மார்கழி. அந்த நேரத்தில் நாம் மூச்சாக எடுக்கும் ஆக்ஸிஜன் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். அதிகாலையிலேயே குளித்துவிடுவது நல்லது.
மார்கழி மாதத்தில் இரவில் கோலம் போடக்கூடாது. மார்கழியில் காலை நேரத்தில் தான் கோலம் போட வேண்டும். இப்போதெல்லாம் இரவிலேயே கோலம் போட்டு சுற்றி செங்கல் அடுக்கி பாதுகாக்கின்றனர். காலையில் தான் வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். கோலம் என்பது வீட்டை அழகுப்படுத்துவது மட்டுமல்ல. ஒரு விதமான தர்ம செயல் எனக் குறிப்பிடலாம்.
மேலும் படிங்க கார்த்திகை தீப திருநாளில் விளக்கேற்றும் நேரம்; செய்ய வேண்டிய வழிபாடு
இதுபோன்ற ஆன்மிக கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com