கார்த்திகை தீப திருநாளில் விளக்கேற்றும் நேரம்; செய்ய வேண்டிய வழிபாடு

இந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருநாளில் எப்போது விளக்கு ஏற்ற வேண்டும் ? வழிபாடு மற்றும் விரத முறை குறித்து இந்த பதிவில் பகிரப்பட்டுள்ளது. இருளை நீக்கி ஒளி பெற்ற வெற்றியை கார்த்திகை தீப திருநாள் குறிக்கிறது.
image

சிவபெருமானை வழிபடக் கூடிய பல முக்கியமான விரத நாட்களில் கார்த்திகை தீப திருநாளும் ஒன்று. சிவபெருமானை மட்டுமல்ல முருகப்பெருமானை வழிபடுவதற்கும் உகந்த நாளாக கார்த்திகை தீப திருநாள் விளங்குகிறது. கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட காரணத்தினால் முருகப்பெருமான் கார்த்திகேயன் என்றும் அழைக்கப்படுகிறார். கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வழிபடுவது மிக நல்லது. இந்த ஆண்டு கார்த்திகை தீபம் டிசம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் நம் அனைவருக்கும் ஞானத்தை புகட்டிய நாளாக கார்த்திகை தீப திருநாள் விளங்குகிறது.

karthigai deepam timing

கார்த்திகை தீப திருநாள் முக்கியத்துவம்

விஷ்ணு பகவானுக்கும் பிரம்மனுக்கும் ஏற்பட்ட பிரச்னையை போக்குவதற்காக சிவபெருமான் ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. அக்னி தலமான திருவண்ணாமலைக்கு நெருங்க முடியாத மலை என்ற ஆன்மிக அர்த்தம் உண்டு. ஆணவம் ஒரு மனிதனை அழித்திடும் என்பதை அனைவரும் அறிவோம். ஆணவம் எங்கு தலை தூக்குகிறதோ, மனிதனின் கட்டுக்குள் இருந்து விலகிச் செல்கிறதோ அதை அடக்கிடும் முறைகளில் ஒன்று வழிபாடு. இந்த கார்த்திகை தீப திருநாளில் ஆணவம் அழிந்திட நாம் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட வேண்டும்.

கார்த்திகை தீபம் விரத முறை

விரத நாளில் தலைக்கு குளிக்கவும். 6 மணிக்கு மேல் தீபம் ஏற்றிவிட்டு சாப்பிடவும். விரதம் இருக்கும் காரணத்தில் தண்ணீர், இளநீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். காலையில் இருந்து உபவாசம் இருப்பது நல்லது. மவுன விரதம் கடைபிடிப்பது விஷேமானதும் கூட. தெரியாமல் தவறுதலாக பேசிவிட்டால் சிவாய நமஹ என சொல்லிவிட்டு மவுன விரத்ததை தொடருங்கள்.

மேலும் படிங்ககந்த சஷ்டி விரதம் கடைபிடித்து முருகனை வழிபடுங்கள்! வாழ்க்கையில் சிக்கல்கள் தீரும்

விளக்கு ஏற்றும் நேரம்

குறைந்தபட்சம் 27 விளக்கு ஏற்றுங்கள். வீட்டு வாசலில் தொடங்கி பூஜை அறை, மற்ற அறைகள், தோட்டம், கிணறு என எங்கும் தீபம் ஏற்றி வீட்டை ஜொலிக்க செய்யுங்கள். பூஜை அறையில் ஷட்கோண வடிவில் தீபம் ஏற்றுங்கள். மாலை 6 மணிக்கு சிவபெருமான் அர்த்தநாரீசுவரராக திருவண்ணாமலையில் 3 நிமிடங்களுக்கு அருள் பாலிக்கும் காட்சியை கண்டு மலை உச்சியில் தீபம் ஏற்றிய அடுத்த விநாடியே வீட்டில் விளக்கு ஏற்றவும். அண்ணாமலையானே அரோகரா என வணங்கி தீபம் ஏற்றுங்கள்.

பொரி, வெல்லம் வைத்து நெய்வேத்தியம் படைக்கவும். இதை முடித்த பிறகு சிவபுராணம் படியுங்கள். வாழ்வில் இருள் நீங்கி ஒளி தோன்றும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP