சிவராத்திரி என்பது ஒவ்வொரு வருடமும் மாசி மாத அமாவாசைக்கு முதல் நாள் வரும். அன்றைய தினம் முழுவதும் சிவ பக்தர்கள் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்து சிவனுக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். அன்றைய தினத்தில் நைவேத்தியம் என்னென்ன பொருட்களை வைத்து செய்யலாம் என்று இந்த கட்டுரையில் காணலாம்
சிவனுக்கு நான்கு பொருள் படையல்
சிவராத்திரி அன்று சிவனுக்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். இந்த நான்கு கால பூஜைகள் என்பது ரிக், யஜூர், சாமா, அதர்வனா என்ற நான்கு வேதங்களின் அடிப்படையில் நடக்கும். ஒரு முறை பிரம்மா, விஷ்ணு உட்பட ஒரு உயிர் கூட இல்லாமல் அனைத்து பிரபஞ்சங்களும் அழிந்து விட்டன. அப்போது பார்வதி தேவி மீண்டும் அனைத்து உயிர்களையும் மீட்டு தருமாறு வேண்டி சிவபெருமானுக்கு இரவு முழுவதும் கண் விழித்து நான்கு கால பூஜைகள் செய்தார். இதுவே சிவராத்திரி உருவான கதை என்று புராணங்கள் கூறுகின்றன.
இதுவும் உதவலாம்:சிவராத்திரி ரெசிபி.. பூரண கொழுக்கட்டை !
எனவே அன்றைய தினம் சிவனுக்கு நைவேத்தியமாக சிவனுக்கு பிடித்த நான்கு பொருட்களை வைத்து வழிபடலாம்
1. தயிர்
2. பால்
3. நெய்
4. தேன்
இவை நான்கும் தனி தனியாக வைத்து வழிபடலாம் அல்லது அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்தும் வழிபடலாம்.
பஞ்ச மகா பிரசாதம்
சிவபெருமான் பஞ்ச பூதங்களையும் படைத்து, அவற்றை ஆட்கொண்டு இருப்பவர். இந்த ஐந்து பூதங்களையும் குறிக்கும் வகையில் ஐந்து பொருட்களை வைத்து செய்யும் பிரசாதம் இது. மேலும் சிவனின் வெவ்வேறு சிவராத்திரிகளான நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி மற்றும் மகா சிவராத்திரி என்ற ஐந்து சிவராத்திரிகளையும் குறிக்கும் வகையில் ஐந்து பொருட்களை கொண்டு செய்ய பட்டது இந்த பஞ்ச மகா பிரசாதம். இதை செய்ய ஐந்து பொருட்கள் தேவை
1. நெய்
2. வெல்லம்
3. ஏலக்காய் தூள்
4. தேங்காய் துருவல்
5. வாழைப்பழம்
செய்முறை
முதலில் கடாயில் நெய் ஊற்றி அதில் வெல்ல தூள் சேர்த்து கிளறவும். பின் ஏலத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். கடைசியில் வாழைப்பழங்களை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இந்த 5 பொருட்களால் செய்யப்பட்ட பஞ்ச மகா பிரசாதம் சிவனின் நைவேத்தியத்திற்கு ஏற்றது.
கோதுமை அல்வா
இந்த நாளில் சிவனுக்கு கோதுமை அல்வா செய்தும் நைவேத்தியமாக வைக்கலாம்
தேவையான பொருள்
- கோதுமை மாவு - 1 கப்
- வெல்லம் - 1 கப்
- ஏலத்தூள் - சிட்டிகை
- நெய் - 1/2 கப்
செய்முறை விளக்கம்
முதலில் ஒரு கப் வெல்லத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்த பின்னர் அதை ஆற வைத்து வடிகட்டி கொள்ளவும். இப்போது கோதுமை மாவை ஒரு கடாயில் நெய் சேர்த்து வறுக்க வேண்டும். கோதுமை மாவு நிறம் மாறும் போது வெல்ல தண்ணீர் ஊற்றி கை விடாமல் கிண்ட வேண்டும். அதில் ஏலத்தூள் மற்றும் நெய் சேர்க்க வேண்டும். நன்கு நெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும். இது சிவபெருமானுக்கு ஏற்ற நைவேத்தியமாக இருக்கும்.
அரிசி மாவு உருண்டை
தேவையான பொருள்
- பச்சரிசி - 1 கப்
- வெல்லம் - 1 கப
- நிலக்கடலை - 1/2 கப்
- பொட்டுக்கடலை - 1/2 கப்
- எள்ளு - 1/4 கப்
செய்முறை விளக்கம்
முதலில் கடாயில் பச்சரிசியை சிவக்க வறுத்து எடுக்கவும், பின் நிலக்கடலை, பொட்டுக்கடலை, எள்ளு ஆகியவற்றை தனியாக வறுக்கவும். வறுத்த அனைத்து பொருட்களையும் கொர கொரப்பாக அரைக்கவும். இப்போது வேறு ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீருடன் வெல்லம், ஏலப்பொடி சிறிது சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டி அரைத்த கொர கொரப்பான பொடியுடன் கலக்கவும். நன்கு ஆறியதும் உருண்டைகளாக பிடிக்கவும். இந்த உருண்டை சாப்பிட சுவையாக இருக்கும்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation