பிரியாணி பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? மூன்று வேளை பிரியாணி குடுத்தாலும் வயிறு முட்டத் தின்போம். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை தவிர்க்க முடியாத, மிகவும் விரும்பத் தக்க உணவாக மாறியிருக்கிறது பிரியாணி. சென்னை சாலையோரங்களில் பிரியாணி கடைகள் வரிசைக்கட்டி இருந்தாலும் கூட எல்லா கடையிலும் கூட்டம் குவியும். சில கடைகளில் வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி செல்வார்கள். தமிழர்களின் வாழ்வியலுடன் பிரியாணி கலந்து விட்டது.
நம்மில் பலருக்கும், உயிரினும் மேலாக இருக்கும் பிரியாணி பலவகைப்படும். ஆம்பூர் பிரியாணி தொடங்கி ஹைதராபாத் பிரியாணி, கல்கத்தா பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, ஆற்காடு பிரியாணி, தலசேரி பிரியாணி, பாம்பே பிரியாணி, லக்னோ பிரியாணி, சிந்தி பிரியாணி வரை லிஸ்ட் நீள்கிறது. இந்த லிஸ்டில் தவிர்க்க முடியாத பிரியாணி ’பாய் வீட்டு கல்யாண பிரியாணி’. இஸ்லாமியர்களின் திருமணங்களில் கறியின் மணத்துடன் ஆவி பறக்க இலையில் பரிமாறப்படும் இந்த பிரியாணி வேறு எங்குமே கிடைக்காத ஒன்று.
இஸ்லாமியர்களின் இந்த பிரியாணி கலாச்சாரம், அவர்களின் தனி அடையாளமாகவே உள்ளது. பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இந்த பிரியாணியின் ஸ்பெஷல், எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. வயிறு நிரம்பியது போன்ற உணர்வையும் தராது. ஆசை தீர சாப்பிடலாம்.
இப்படியொரு சூப்பரான பிரியாணியை இந்த சண்டே வீட்டிலேயே செய்து பார்க்கலாமா? அதற்கு இந்த செய்முறையை குறித்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
- பாஸ்மதி அரிசி – 1 கிலோ
- சிக்கன் – 1.1/5 கிலோ
- நெய் – 100 மி.லி
- எண்ணெய் - 100 மி.லி
- பட்டை – 2 கிராம்
- ஏலக்காய் – 7
- கிராம்பு – 6
- வெங்காயம் – 400 கிராம்
- இஞ்சி பூண்டு விழுது – தேவையான அளவு
- புதினா –கொத்தமல்லி – ஒருகைபிடி அளவு
- தக்காளி – 400 கிராம்
- தயிர் – 180 மி.லி
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- பால் – 200 மி.லி
- எலுமிச்சை – 1
இந்த பதிவும் உதவலாம்: செட்டிநாடு சிக்கன் கிரேவி வீட்டிலேயே செய்வது எப்படி?
செய்முறை
- பாஸ்மதி அரிசியை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின்பு, அடுப்பில் அகலமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். இதில்தான் பாஸ்மதி அரிசியை வேக வைத்து எடுக்க வேண்டும்.
- பின்பு மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பிரியாணி செய்ய ஆரம்பிக்கவும்.
- பாத்திரம் சூடானதும் அதில் நெய், எண்ணெய் சேர்க்கவும். பின்பு அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
- அடுத்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
- இப்போது ஒருகைப்பிடி அளவுக்கு கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து வதக்கி, அதில் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வேக விடவும்.
- அடுத்து, தயிர் சேர்த்து வதக்கி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து மசாலாவுடன் நன்கு கலந்து விடவும்.
- இப்போது, சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து, அடுப்பின் தீயை குறைத்து வைத்து சிக்கனை வேக விடவும்.
- பின்பு பிரியாணிக்கு தேவையான 800.மி.லி தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இந்த பதிவும் உதவலாம்: கேரளா ஸ்பெஷல் மீன் கறி செய்வது எப்படி என தெரியுமா?
- இப்போது அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து சில வினாடிகள் கொதிக்க விடவும். இறுதியாக பச்சை பால் சேர்த்து பாத்திரத்தை மூடி கலவையை வேக விடவும்.
- அடுப்பில் இருக்கும் மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் கொதித்ததும் அதில் ஊற வைத்துள்ள அரிசியை சேர்க்கவும்.
- இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து பாதி பதத்திற்கு வேக வைக்கவும். பின்பு அரிசியை வட்டிக்கட்டி, கொதித்து கொண்டிருக்கும் பிரியாணி கலவையுடன் சேர்க்கவும்.
- இப்போது பாத்திரத்தை தட்டால் மூடி, அடுப்பை குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும். அடுத்து அடுப்பை அணைத்து பாத்திரத்தை 10 நிமிடம் அப்படியே விடவும்.
- இப்போது தட்டின் மேல் கனமான பொருளை வைத்து சிறிது நேரம் விடவும். அவ்வளவு தான் முடிந்தது. பாரம்பரியமான கல்யாண வீட்டு பிரியாணி தயார்.
நீங்களும் இந்த செய்முறையைப் பின்பற்றி வீட்டிலேயே அட்டகாசமான கல்யாண வீட்டு பிரியாணி செய்யுங்கள். வீட்டில் இருப்பவர்கள் அடிதூள் என்பார்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation