Ugadi Pachadi : அறுசுவை கொண்ட ஆரோக்கியமான உகாதி பச்சடி

அறுசுவை கொண்ட உணவை ருசிக்க விருப்பமா ? வரும் யுகாதி பண்டிகைக்கு பச்சடி செய்து சாப்பிடுங்கள். அறுசுவை மட்டுமல்ல ஆரோக்கியமும் கிடைக்கும்.

ugadi pachadi ingredients

உகாதி என்பது தெலுங்கு புத்தாண்டு கொண்டாட்டம் ஆகும். தெலுங்கர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள இது நல்ல நாளாக கருதப்படுகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உகாதி கொண்டாட்டத்தின் போது பச்சடி செய்வது மிகவும் பொதுவானது. இது துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்பு, கசப்பு மற்றும் உவர்ப்பு என அறுசுவைகளையும் கொண்டது. உகாதி அன்று காலையில் குளித்து முடித்த பிறகு பச்சடி செய்து சாமிக்கு படையலிட்டு கும்பிடுவார்கள். இதை சாப்பிட்ட பிறகே பிற உணவுகளை சாப்பிடுவது வழக்கம். நம் நாட்டில் காலம் காலமாக அறுசுவை உணவுகளை சாப்பிட்டு வந்தோம். ஆறு சுவையும் நமது ஆரோக்கியத்தில் பங்களிப்பதாக சொல்லப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் உடல்நலக் குறைபாடு வருவதற்கு துவர்ப்பு, கசப்பு ஒதுக்கியதே காரணம். காரம், இனிப்பு கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடுகிறோம். மற்ற சுவைகளை போல துவர்ப்பு, கசப்பு உள்ள உணவுகளை உட்கொள்வதில்லை. அனைத்தையும் சம அளவில் சாப்பிடும் போது மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

healthy ugadi pachadi

உகாதி பச்சடி செய்யத் தேவையானவை

  • மாங்காய்
  • புளி கரைசல்
  • உப்பு
  • மிளகாய் தூள்
  • வெல்லம்
  • வேப்பம் பூ
  • வெள்ளரிக்காய்
  • முலாம்பழம் விதை

உகாதி பச்சடி செய்முறை

  • ஒரு கையடக்க மாங்காயின் தோல் நீக்கி அதை ஊறுகாய் போடும் அளவிற்கு பொடிதாக நறுக்கவும். மாங்காயில் அறுசுவைகளும் இருப்பதால் பச்சடி தயாரிப்பில் இது முக்கிய இடம்பெறுகிறது.
  • துவர்ப்பு சுவைக்காக இதனுடன் வெள்ளரிக்காய் சேர்க்கிறோம். ஒரு முழு மாங்காய்க்கு கால் அளவிற்கு வெள்ளரிக்காய் பயன்படுத்தவும்.
  • இவை இரண்டையும் ஒன்றாக வைக்கவும்.
  • அடுத்ததாக உலர வைத்த வேப்பம் பூவை கசப்பு தன்மைக்காக எடுத்துக்கொள்ளவும். இதனுடன் முலாம்பழ விதைகளை தண்ணீரில் ஊற்றி நன்கு கழுவி வெயிலில் காய வைத்து தோல் நீக்கி இரண்டு ஸ்பூன் அளவிற்கு சேர்க்கவும்.
  • கொஞ்சம் சாரப் பருப்பை கசப்பு, துவர்ப்பு சுவைக்காக எடுத்துக்கொள்ளவும். இது புரதச் சத்து நிறைந்தது.
  • அடுத்ததாக எலுமிச்சை பழத்தை விட சின்ன சைஸில் உள்ள புளியை தண்ணீரில் கரைத்து மூன்று ஸ்பூன் அடுத்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு ஸ்பூன் வெல்லம், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  • இறுதியாக கொஞ்சம் மிளகாய் தூள் சேருங்கள். இவை அனைத்தையும் நன்கு கலந்து வெட்டி வைத்த மாங்காய் வெள்ளரியுடன் சேர்க்கவும். அறுசுவைகளையும் கொண்ட இந்த பச்சடி மிகவும் ருசியாக இருக்கவும்.
  • உகாதி அன்று இதை கட்டாயம் செய்யுங்கள். ஆரோக்கியத்திற்கான அனைத்து விஷயங்களும் இதில் உள்ளன.

ஹெர் ஜிந்தகி வாசகர்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் உகாதி வாழ்த்துகள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP