கோடை வெயிலுக்கு இதமாக மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டா சுவைக்கலாம் வாங்க!

கோடை வெயிலுக்கு இதமாக ஏதாவது குடிக்க வேண்டும் என தோன்றுகிறதா ? நீங்கள் மதுரைக்காரராக இல்லையென்றாலும் விளக்குதூண் ஃபேமஸ் ஜிகர்தண்டாவை ருசிக்கலாம்.

jigarthanda recipe

ஊட்டச்சத்து நிறைந்த உணவு செய்முறையில் நாம் அடுத்ததாக பார்க்கப் போவது கோடை காலத்திற்கு இதமான ஜில் ஜில் ஜிகர்தண்டா. மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டா என்றால் யாருக்கு தான் பிடிக்காது. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் விளக்குதூண் பகுதியில் உள்ள கடையில் கிடைக்கும் ஜிகர்தண்டாவின் சுவையை வேறு எங்கும் பெற முடியாது. தமிழகத்தின் பிற ஊர்களில் ஜிகர்தண்டா கடைகள் இருந்தாலும் விளக்குதூண் பகுதியில் கிடைக்கும் ஜிகர்தண்டாவின் சுவைக்கு வேறு எதுவும் ஈடாகாது. இதை குடிப்பதற்கு மதுரைக்கு தான் செல்ல வேண்டுமா ? வீட்டிலும் ஜிகர்தண்டா செய்யலாம்.

ஜிகர்தண்டா செய்யத் தேவையானவை

  • கொழுப்பு நிறைந்த பால்
  • சர்க்கரை
  • பாதாம் பிசின்
  • நன்னாரி சர்பத்
  • பால்கோவா
  • குக்கிங் கிரீம்
summer drink jigarthanda

ஜிகர்தண்டா செய்முறை

  • ஒரு பேனில் 15 ஸ்பூன் சர்க்கரை போட்டு அதில் தண்ணீர் ஊற்றாமல் சூடுபடுத்தவும். சர்க்கரை கேரமல் செய்வதற்கு தண்ணீர் ஊற்றினால் நிறம் மாறும். மேலும் அதிக நேரம் எடுக்கும்.
  • சர்க்கரையை குறைந்த தீயில் சூடுபடுத்திய பிறகு ஏழு எட்டு நிமிடங்களில் தேனின் நிறத்திற்கு மாறும். அப்படி வந்தவுடன் அடுப்பை ஆஃப் செய்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றுங்கள்.
  • அடுத்ததாக அகலமான கடாயில் ஒரு லிட்டர் பால் ஊற்றுங்கள். நாம் கொழுப்பு நிறைந்த பால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சாதாரண பால் பயன்படுத்த கூடாது. பால் நன்றாக கொதிப்பதற்கு குறைந்தது ஐந்து நிமிடம் எடுக்கும். ஓரத்தில் ஒட்டும் பால் ஆடையை எடுத்து மீண்டும் பாலில் போடவும்.
  • ஒரு லிட்டர் பால் பாதியாக வரும் அளவிற்கு கொதிக்க விடவும். அதன் பிறகு சர்க்கரை பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். தேவையான சுவைக்கு சர்க்கரை பாகு பயன்படுத்துங்கள். சுகர் சிரப் அதிகமாக பயன்படுத்தினால் கேரமல் சுவை வரும். எனவே தேவையான அளவுக்கு பயன்படுத்துங்கள்.
  • இதன் பிறகு ஐந்து ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். பால் கொஞ்சம் கெட்டியாக வருவதற்கு பால்கோவா போடுங்கள். மூன்று ஸ்பூன் பாதாம் பிசினை தண்ணீரில் ஊறவைக்கவும். சிறிது நேரம் கழித்து இதில் சர்க்கரை பாகு ஊற்றவும். பாதாம் பிசினின் நிறம் மாறும்.
  • அடுத்ததாக 500 மில்லி லிட்டர் குக்கிங் கிரீமை மிக்ஸியில் போட்டு நன்கு அடித்த பிறகு அதில் கொதிக்க வைத்த ஜிகர்தண்டா பால் சேர்க்கவும். இதில் பாதியை ஃபிரிட்ஜில் வைக்கவும். மீதம் இருக்கும் ஜிகர்தண்டா பாலுடன் நன்னாரி சர்பத் மற்றும் பாதாம் பிசின் சேருங்கள்.
  • நன்கு கலந்து விட்டு 150 மில்லி லிட்டர் டம்ளரில் பாதியளவிற்கு ஊற்றி பிரிட்ஜில் குளிரூடப்பட்ட பாதாம் பாலை இதில் சேர்க்கவும்.
  • இதற்கு மேல் மீண்டும் ஜிகர்தண்டா பால் ஊற்றி கொஞ்சம் சர்க்கரை பாகு சேர்த்தால் மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா ரெடி.
  • இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஃபிரிட்ஜில் வைத்து குடிக்கலாம். கோடை வெயிலுக்கு மிகவும் இதமாக இருக்கும்.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP