herzindagi
thai pongal this year

Types of Pongal: பொங்கலை இத்தனை விதமாக செய்யலாமா?

எப்போதும் செய்யும் பொங்கலுக்கு பதிலாக இதை முயற்சிக்கலாமே!! 
Editorial
Updated:- 2023-01-13, 10:12 IST

பொங்கல் பண்டிகை என்பது சூரியன், இயற்கை வளம், பண்ணை விலங்குகள் மற்றும் விளைச்சளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் அறுவடை திருநாள் ஆகும். தை மாதத்தின் முதல் நாள் சூரிய பொங்கலாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீட்டு வாசலில் கோலம் போட்டு, மாவிலை தோரணம் கட்டி அலங்காரம் செய்து, பின் வீட்டில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபடுவோம்.

பானையின் மேல் பால் பொங்கி வரும் போது குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து" பொங்கலோ பொங்கல்" என்று மகிழ்ச்சி குரல் எழுப்புவது வழக்கம். சூரிய பகவானுக்குப் பொங்கல் சமர்ப்பித்த பிறகு, வீட்டில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து பொங்கல் சாப்பிடும் போது பசியுடன் மனமும் நிறைந்துவிடும். ஒவ்வொரு வீட்டு வழகத்தின் படி பொங்கல் செய்முறையும் மாறும். நாம் அறிந்திடாத ஏராளமான பொங்கல் வகைகள் உள்ளன. ஒரு சில பொங்கல் வகைகளை உங்களுக்காக இந்த பதிவில் பகிர்ந்துள்ளோம்.

சர்க்கரை பொங்கல்

pongal variety

இதன் செய்முறை மிகவும் எளிமையாக இருந்தாலும், சுவை நிறைந்தது. இதில் இனிப்பு சுவைக்காக வெல்லம் சேர்க்கப்படுவதால் இரும்பு சத்து நிறைந்ததாக இருக்கும். பச்சரிசி மற்றும் பாகு வெல்லம் பயன்படுத்தி பொங்கல் செய்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும். பால் மற்றும் தண்ணீர் கலவை கொதித்து பொங்கி வரும் போது அரிசி பருப்பு சேர்த்து குழைய வேக வைக்க வேண்டும். பின் வெல்லம், நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை, எல்லாம் சேர்த்து சரியான பக்குவத்தில் செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். உங்கள் வசதிக்கு ஏற்ப பிரஷர் குக்கர் அல்லது பானையில் பொங்கல் வைக்கலாம்.

பால் பொங்கல்

இது வெள்ளை பொங்கல் என்றும் அறியப்படுகிறது. இந்த பொங்கல் செய்வதற்கு அரிசியை பாலில் வேகவைக்க வேண்டும். இதன் மேல் நெய் தூவி சாம்பார் அல்லது பொங்கல் ஸ்பெஷல் காய்கறி கூட்டுடன் பரிமாறலாம்.

pal pongal

கல்கண்டு பொங்கல்

இது அரிசி, பாசிப்பருப்பு, நெய் மற்றும் கல்கண்டை மூலமாக கொண்டு தயாரிக்க படுகிறது. இதில் இனிப்பு சுவைக்காக வெல்லத்திற்கு பதிலாக கல்கண்டு பயன்படுத்தபடுகிறது. நீங்கள் விரும்பினால் இதில் பாலில் ஊரவைத்த குங்குமப்பூவையும் சேர்க்கலாம்.

வெண்பொங்கல்

குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் பிடிக்கும் என்றாலும், வீட்டில் உள்ள பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவது இந்த வெண்பொங்கலை தான். அதுவும் சாம்பார் மற்றும் பொங்கல் கூட்டுடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். இதில் சேர்க்கப்படும் இஞ்சி, மிளகு மற்றும் பெருங்காயம் செரிமானத்திற்கு உதவுகின்றன. தண்ணீர் அளவுகளை மட்டும் பார்த்துக்கொண்டால் போதும் இந்த பொங்கலை சுலபமாக செய்திடலாம்.

pongal varities

கருப்பட்டி பொங்கல்

இது அரிசி, பருப்பு மற்றும் கருப்பட்டி கொண்டு தயாரிக்கப்படுக்கிறது. இது ஆரோக்கியமானது. ஏனெனில் இதில் இரும்பு சத்து நிறைந்துள்ளது.

கரும்பு சாறு பொங்கல்

கரும்பு சாறை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பொங்கல் கூடுதல் சுவையுடன் இருக்கும். வீட்டில் கரும்பு மீதம் இருக்கும் போது இதை நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள். வித்தியாசன இந்த பொங்கலை நிச்சயம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த பதிவும் உதவலாம்: பொங்கல் பண்டிகைக்கு நல்ல பானைகளை வாங்க சில டிப்ஸ்


சிறுதானிய பொங்கல்

Pongal sweet

அரிசிக்கு பதிலாக வரகு, சாமை போன்ற தானியங்களை பயன்படுத்தி ஆரோக்கியமான பொங்கல் செய்யலாம். இதனை கொண்டு இனிப்பு மற்றும் வெண்பொங்கலும் செய்ய முடியும்.

இதில் எந்த வகை பொங்கலை நீங்கள் முயற்சி செய்ய போகிறீர்கள் என்பதை மறக்காமல் கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

இந்த பதிவும் உதவலாம்: சிறந்த காலை நேர டிபன்! வெண் பொங்கல் செய்வது எப்படி?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik,google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com