
கொலஸ்ட்ராலின் சமநிலையை பேணுவது மிகவும் முக்கியம். ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது, அது உயர் இரத்த கொலஸ்ட்ராலுக்கு வழிவகுக்கிறது, இதனால் பல தீவிர உடல்நல பிரச்சினைகளின் அபாயம் அதிகரிக்கிறது. எனவே, ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்திற்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக அவசியம்.
நமது சமையலறைகளில் பயன்படுத்தப்படும் சில மூலிகை வகைகள், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுகின்றன. அன்டிஆக்சிடென்ட்ஸ் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த இலைகள், உயர் கொலஸ்ட்ரால் மற்றும் அது தொடர்பான இருதய நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகின்றன. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது பல பிரச்சனைகளை தடுக்க உதவும். அவற்றை இதில் காண்போம்.
துளசி மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் போக்க உதவுகிறது என்று அறியப்படுகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிடுவது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. துளசி இலைகள் மனதுக்கு அமைதியையும், உடலுக்கு புத்துணர்ச்சியையும் அளிக்கின்றன.

மேலும் படிக்க: கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்? அவசியம் பின்பற்ற வேண்டிய 5 குறிப்புகள்
கறிவேப்பிலையில் உள்ள இயற்கையான சேர்மங்கள், உடலில் உள்ள கொழுப்பு மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது, இதனால் உடல் எடையை நிர்வகிக்க இது பயன்படுகிறது. மேலும், காலையில் கறிவேப்பிலையை சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கும் துணை புரிகிறது.
மேலும் படிக்க: வீட்டிலேயே இருக்கும் அற்புத மருந்துகள்; சளி மற்றும் இருமலுக்கு தீர்வு அளிக்கும் இயற்கை வைத்திய முறை
கொத்தமல்லி இலைகள் அன்டிஆக்சிடென்ட்ஸ் நிறைந்தது. இது இயற்கையாகவே உடலை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும், இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், தீங்கு விளைவிக்கும் நச்சுகளை (Toxins) வெளியேற்றவும் உதவி செய்கிறது. இதன் மூலம் உடல் அமைப்பை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும்.

கீரை இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின் கே நிரம்பிய ஒரு ஆற்றல் மையம் போன்று செயல்படும். கீரையில் உள்ள லூடீன் (Lutein) என்ற சத்து, இரத்த நாளங்களை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. கீரையை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது கொலஸ்ட்ராலை திறம்பட நிர்வகிக்க உதவும்.
இது போன்ற எளிய மாற்றங்களை உங்கள் உணவு முறையில் மேற்கொள்வதன் மூலம் நமது ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com