வீடே மணக்கும் சுவையில் சாம்பார் ருசித்திட இதை மட்டும் பண்ணுங்க

எப்படி சாம்பார் செய்தாலும் ருசியில் திருப்தி கிடைக்கவில்லையா ? இந்த பதிவில் சுவை மிகுந்த சாம்பாரை ருசித்திட நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற விவரம் பகிரப்பட்டுள்ளது. இதை பின்பற்றி வீடு மணக்க சாம்பார் செய்து ருசி பாருங்கள்.
image

தென் இந்திய சமையலில் தவிர்க்க முடியாத உணவுகளில் சாம்பார் முதன்மை வகிக்கிறது. இட்லி, தோசை, பொங்கல், சூடான சாதத்தில் இரண்டு கரண்டி சாம்பார் ஊற்றி கொஞ்சம் நெய் போட்டு பிசைந்து சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். பலருக்கும் ஹோட்டலில் செய்யக்கூடிய சாம்பாரை ருசிக்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கும். இதற்கு தீர்வு அளித்திடவே இந்த பதிவு. தரமான துவரம் பருப்பு, வேகவைத்த காய்கறிகள், சாம்பார் பொடி ஆகியவை சுவை மிகுந்த சாம்பாரை ருசிக்க உதவும். இதற்கு கடையில் சாம்பார் பொடி வாங்க வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே எளிதில் தயாரிக்கலாம். வாருங்கள் சுவை மிகுந்த சாம்பாரின் செய்முறையை பார்ப்போம்.

sambar ingredients

சாம்பார் செய்யத் தேவையானவை

  • துவரம் பருப்பு
  • கடலை பருப்பு
  • உளுந்து பருப்பு
  • பெரிய வெங்காயம்
  • வர மிளகாய்
  • வெந்தயம்
  • கடுகு
  • சீரகம்
  • பூண்டு
  • தனியா
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • புளி
  • நல்லெண்ணெய்
  • கட்டி பெருங்காயம்
  • இலவங்கப்பட்டை
  • கறிவேப்பிலை
  • கேரட்
  • கத்திரிக்காய்
  • முருங்கைக்காய்

மேலும் படிங்கஆந்திரா ஸ்டைல் மஜ்ஜிகா சாறு எனும் மோர் குழம்பு செய்முறை

சாம்பார் செய்முறை

  • முதலில் ஒரு டம்ளர் துவரம் பருப்பை தண்ணீரில் நன்கு கழுவி குக்கரில் பருப்பு போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி மூடிவிடுங்கள்
  • இரண்டு விசில் அடித்த பிறகு அரை வெங்காயத்தை பொடிதாக நறுக்கி சேர்த்து மீண்டும் ஒரு விசில் அடிக்க விடுங்கள். பிறகு சூடு குறைந்தவுடன் பருப்பு கடையவும்.
  • சாம்பார் பொடி தயாரிப்பதற்கு கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி5 ஸ்பூன் தனியா, ஒரு இன்ச் கட்டி பெருங்காயம், ஒரு இலவங்கபட்டை, 4 ஸ்பூன் கடலை பருப்பு, 4 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் சீரகம், 7 வர மிளகாயை வறுக்கவும்.
  • சூடு குறைந்தவுடன் மிக்ஸியில் போட்டு 8 பூண்டு சேர்த்து அரைத்தால் சாம்பார் பொடி ரெடி.
  • இதனிடையே ஒரு எலுமிச்சை சைஸ் புளியை 75 மில்லி லிட்டர் சுடு தண்ணீரில் ஊற்றி ஊறவைக்கவும்.
  • அதே பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போடுங்கள். கடுகு வெடித்தவுடன் ஒரு பெரிய வெங்காயத்தை பொடிதாக நறுக்கி சேர்க்கவும்.
  • வெங்காயம் வதங்கியவுடன் கறிவேப்பிலை போடுங்கள். இப்போது இரண்டு கத்திரிக்காய், இரண்டு முருங்கைக்காய், ஒரு கேரட் நறுக்கி சேர்த்து வதக்கவும்.
  • தேவையான அளவு உப்பு மற்றும் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு காய்கறிகள் கொஞ்சம் வெந்தவுடன் இரண்டு தக்காளியை பொடிதாக நறுக்கி சேருங்கள்.
  • ஐந்து நிமிடங்கள் கழித்து காரத்திற்கு ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 3 ஸ்பூன் சாம்பார் பொடி போடுங்கள்.
  • அனைத்தையும் நன்கு கலந்துவிட்டு புளி தண்ணீர் ஊற்றவும். ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைத்த பருப்பு சேருங்கள். கடாயை ஐந்து நிமிடங்களுக்கு மூடி விடுங்கள்.
  • நன்கு கொதித்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி சாதத்தில் இரண்டு கரண்டி ஊற்றி கொஞ்சம் நெய் சேர்த்து அப்பளத்தோடு சாப்பிட்டு பாருங்கள்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP