ஆந்திரா ஸ்டைல் மஜ்ஜிகா சாறு எனும் மோர் குழம்பு செய்முறை

ஆந்திரா மோர் குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா ? சுவையும் ஆரோக்கியமும் கொண்ட மோர் குழம்பை 15 நிமிடங்களுக்குள் எளிதில் தயாரிக்கலாம். இதை ஆந்திராவில் கோடை கால அற்புதம் என குறிப்பிடுகின்றனர்.
image

ஆந்திரா மீல்ஸில் கண்டி பொடிக்கு அடுத்தபடியாக நம்முடைய கவனத்தை ஈர்க்கும் உணவு மோர் குழம்பு. தமிழகத்தில் மோர் குழம்பு, கேரளத்தில் மோர் கறி, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் மஜ்ஜிகே சாறு என்றழைக்கப்படும் மஜ்ஜிகே புளுசு ஆந்திரா சமையலில் குறிப்பிடத்தக்கத உணவாகும். கோடை காலத்தில் ஆந்திரா மக்கள் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். சூடான சாதத்தில் இரண்டு கரண்டி மோர் குழம்பு ஊற்றி பிசைந்து வடகம், வத்தல், நார்த்தங்காய் ஊறுகாய் உடன் சேர்த்து சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. மிகவும் எளிதாக 15 நிமிடங்களுக்குள் மோர் குழம்பை தயாரித்து விடலாம்.

majjiga charu

மோர் குழம்பு செய்யத் தேவையானவை

  • தயிர்
  • மஞ்சள் தூள்
  • தண்ணீர்
  • உப்பு
  • வெண்டைக்காய்
  • சின்ன வெங்காயம்
  • சுரக்காய்
  • பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை
  • நல்லெண்ணெய்
  • சீரகம்
  • கடுகு
  • வெந்தயம்
  • பெருங்காயம்

மேலும் படிங்ககர்நாடகா ஸ்பெஷல் தக்காளி பாத் செய்முறை; குழந்தைகளுக்கான ரெசிபி

மோர் குழம்பு செய்முறை

  • பாத்திரத்தில் அரை லிட்டர் தயிர் எடுத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விட்டு விஸ்க் வைத்து அடிக்கவும்.
  • மோர் குழம்பிற்கான தாளிப்பு செய்ய ஏழு எண்ணிக்கையில் வெண்டைக்காய் மற்றும் சின்ன வெங்காயம், பாதி சுரக்காய், இரண்டு பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை எடுத்து கொள்ளுங்கள். இனி தாளிப்பு வேலை மட்டுமே பாக்கி.
  • கடாயில் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி தலா ஒரு ஸ்பூன் வெந்தயம், சீரகம், கடுகு போடவும்.
  • கடுகு வெடித்தவுடன் நான்கு காய்ந்த மிளகாய், நான்கு பூண்டு, கொஞ்சம் பெருங்காயம் போட்டு வதக்கவும்.
  • இப்போது தேவையான அளவு கறிவேப்பிலை, பாதியாக நறுக்கிய வெண்டைக்காய், இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயங்கள், பொடிதாக நறுக்கிய சுரக்காய் ஆகியவற்றை சேருங்கள்.
  • இரண்டு பச்சை மிளகாயை போட்டு ஒரு நிமிடத்திற்கு வதக்கிவிட்டு தேவையான அளவு உப்பு போட்டு கடாயை மூடிவிடுங்கள்.
  • 5 நிமிடங்கள் கழித்து அரை ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு பாத்திரத்தில் வைத்திருந்த அரை லிட்டர் தயிரை ஊற்றி இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்கள். உப்பு அளவை சரிபார்க்கவும்.
  • மோர் குழம்பு எனும் ஆந்திரா மஜ்ஜிகா சாறு ரெடி. கோடை காலத்து ஸ்பெஷல் ரசம் எனவும் மோர் குழம்பு சொல்லப்படுகிறது.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP