herzindagi
pepper chicken gravy

Pepper Chicken Roast : பாரம்பரிய சுவையில் அட்டகாசமான கோழி மிளகு பிரட்டல்

அடுத்த முறை சிக்கன் வாங்கும் பொழுது, இந்த மாதிரி கோழி மிளகு பிரட்டல் செய்து பாருங்கள்…
Editorial
Updated:- 2023-06-13, 09:11 IST

பொதுவாக சளி பிடித்தால் நாட்டு கோழி சூப், நண்டு சூப் மாதிரியான உணவுகளை சாப்பிடுவோம். இனி இந்த மாதிரி பாரம்பரிய முறையில் கோழி மிளகு வறுவலையும் செய்து சாப்பிடுங்க. சளி எல்லாம் கரைந்து மலத்தில் வெளியேறிவிடும். இந்த ரெசிபி செய்வதற்கு பிராய்லர் கோழியை விட நாட்டு கோழியை பயன்படித்தினால் கூடுதல் நன்மைகளை பெறலாம்.

 

ஃபிரெஷாக அரைத்த மிளகு, சீரகம், சோம்பை இறுதியாக சேர்க்கும் பொழுது வீடெங்கும் மணம் வீசும். கோழி மிளகு பிரட்டல் செய்த கடாயில் சூடாக வடித்த சாதம், ஒரு ஸ்பூன் நெய் மற்றும் ஒரு சில சிக்கன் துண்டுகள் சேர்த்து கிளறி சாப்பிடுங்கள். சிக்கனை கூட விட்டு கொடுத்து விடலாம், ஆனால் இந்த கடாய் சோறை மட்டும் விட்டு கொடுக்கவே மனம் வராது. குழந்தைகளுக்கும் நெய் சேர்த்த இந்த சாதத்தை கொடுக்கலாம். உங்கள் தேவைக்கு ஏற்ப மிளகை கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்து கொள்ளலாம். கோழி மிளகு பிரட்டல் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்…

 

இந்த பதிவும் உதவலாம்: வெறும் 3 பொருட்கள் போதும், இனி வீட்டிலேயே சுவையான மேங்கோ ஐஸ்கிரீம் செய்யலாம்!

 

தேவையான பொருட்கள்

south indian pepper chicken gravy

  • சிக்கின் - 1/2 கிலோ
  • சோம்பு - 1 டீஸ்பூன்
  • மிளகு - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சு பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
  • கரம் மசாலா பொடி - ½ டீஸ்பூன் 
  • சின்ன வெங்காயம் - ¼ கிலோ
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • கொத்தமல்லி - சிறிதளவு 
  • தண்ணீர் - தேவைக்கு ஏற்ப

செய்முறை

spicy pepper chicken fry

  • முதலில் ஒரு கடாயில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் மிளகு, சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து வறுக்கவும்.
  • குறைந்த தீயில் வைத்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கி ஆற விடவும்.
  • சூடு குறைந்த பிறகு, இதனை ஒரு மிக்ஸர் ஜாருக்கு மாற்றி நன்கு படித்துக் கொள்ளவும்.
  • இப்போது ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  • எண்ணெய் சூடானவுடன் சோம்பு சேர்த்து பொறிய விடவும். அடுத்ததாக சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • இந்த சமயத்தில் கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொண்டால் வெங்காயம் சீக்கிரம் வதங்கி விடும்.
  • வெங்காயத்தின் நிறம் லேசாக மாறும்பொழுது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • இதனுடன் மஞ்சள் பொடி மற்றும் கரம் மசாலா பொடி சேர்த்து கிளறவும்.
  • இப்போது கழுவி சுத்தம் செய்த வைத்துள்ள சிக்கனை சேர்த்து எண்ணெயில் வதக்க வேண்டும்.
  • சிக்கன் வதங்கிய பிறகு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும். அதிகமாக தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
  • தண்ணீர் முழுவதும் வற்றி சிக்கன் வெந்த பிறகு பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகம் மற்றும் சோம்பு பொடி சேர்த்து கிளறவும்.
  • இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலாம்.

இந்த காரசாரமான கோழி மிளகு பிரட்டலை நீங்களும் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களின் பாராட்டுக்களை பெறுவது உறுதி!

 

இந்த பதிவும் உதவலாம்: காபி பிடிக்குமா? அப்போ உடனே இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com