திருப்பதி திருமலை வடை ருசித்தது உண்டா ? ஏழுமலையானின் ஸ்பெஷல் நெய்வேத்திய பிரசாதம்...

அட திருப்பதி லட்டு இருக்கட்டும்... இந்த திருப்பதி திருமலை வடை சாப்பிட்டு இருக்கீங்களா ? திருப்பதி போகணும் அவசியமில்லை. வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.

tirumala vada recipe

ஆரோக்கியம் நிறைந்த உணவு செய்முறையில் நாம் அடுத்ததாக பார்க்கப் போவது திருப்பதி திருமலா வடை. என்னது பெருமாள் பிரசாதத்தை ஆரோக்கியமான உணவு குறிப்பிடுகிறேன் என யோசிக்கிறீர்களா ? ஆம். இந்த வடை புரதச் சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. இந்த வடை திருப்பதி கோவிலில் உள்ள சுவாமி பாலாஜிக்கு வழங்கப்படும் சுவையான மிருதுவான பொறித்த பஜ்ஜி ஆகும். தமிழ்நாட்டில் இதை மிளகு வடை என்கிறோம். ஆனால் திருப்பதி வடைக்கும் இங்குள்ள மிளகு வடைக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. தமிழகத்தில் அனுமன் ஜெயந்தியின் போது மிளகு வடைகளை மாலையாக கோர்த்து சிலைக்கு அணிவிப்பர். பெரும்பாலான பெருமாள் கோவிலில் இந்த வடையை நெய்வேத்தியமாக வழங்குவதை பார்க்க முடியும். திருப்பதி லட்டு எந்தளவிற்கு அதே அளவிற்கு இந்த ஃபேமஸ். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இதை பிரசாதமாக தயாரித்து பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்யலாம். இது திருப்பதி பாலாஜிக்கு பிடித்தமான பிரசாதமாகும். தெய்வத்தை வணங்கி விட்டு வெளியேறும் பாதையில் நமக்கு இதை வழங்குவார்கள்.

tirumala temple vada prasadam

திருப்பதி வடை செய்யத் தேவையானவை

  • கருப்பு உளுந்து
  • சீரகம்
  • மிளகு
  • உப்பு
  • பெருங்காயத் தூள்

குறிப்பு : திருப்பதி திருமலை வடை செய்வதற்கு தரமான கருப்பு உளுந்து தேவை. அப்போது தான் அச்சு அசலாக திருப்பதி வடை கிடைக்கும்.

மேலும் படிங்கவேற லெவல் சுவையில் கர்நாடகா முளுபாகல் நெய் தோசை!

திருப்பதி திருமலை வடை செய்முறை

  • முதலில் ஒரு கப் கருப்பு உளுந்து எடுத்து தண்ணீரில் இரண்டு மூன்று முறை நன்கு கழுவி ஐந்து மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊறவைக்கவும்.
  • இதனிடையே தலா ஐந்து ஸ்பூன் சீரகம், மிளகு எடுத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
  • இதையடுத்து ஊறவைத்த உளுந்தில் இருந்து தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.
  • இதன் பிறகு ஏற்கெனவே அரைத்த சீரகம், மிளகை இதில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  • கொஞ்சமாக பெருங்காயத் தூள் சேர்க்கலாம். இது உங்கள் விருப்பம். சிலர் சீரகம் சேர்க்காமல் கருப்பு உளுந்து, உப்பு, மிளகு ஆகிய மூன்று பொருட்களை மட்டுமே கொண்டு செய்வார்கள்.
  • கைகளை சுத்தமாக வைத்து இவற்றை நன்கு மிக்ஸ் செய்யவும். அடுத்ததாக தட்டின் பின்புறத்தில் கொஞ்சம் ஈரமான துணியை போட்டு அதில் இந்த மாவை வட்டமாக தண்ணீர் தொட்டு தொட்டு தட்டவும்.
  • நீங்கள் மாலையாக கோர்க்க விரும்பினால் நடுவே ஓட்டை போடவும்.
  • கடாயில் கடலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு மாவை போட்டு மிதமான தீயில் இரண்டு புறமும் நன்கு வறுத்து எடுத்தால் திருப்பதி திருமலை வடை ரெடி!
  • இதை காற்று புகாத பாத்திரத்தில் போட்டு வைத்து சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு கூட கெடாது.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். எங்களை முகநூலில் பின்தொடர்வதற்குHer Zindagi கிளிக் செய்யவும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP