உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டுவை எத்தனை முறை சாப்பிட்டாலும் அதை மீண்டும் ருசிக்கவே நாம் விரும்புவோம். திருப்பதிக்கு சென்றால் மட்டும் தான் லட்டு கிடைக்குமா ? திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். பல்வேறு கோயில் பிரசாதங்களின் ரெசிபியை இங்கு பகிர்ந்துள்ளோம். ஆனால் திருப்பதி லட்டு செய்முறையை டிகோட் செய்வது சற்று கடினமாகிவிட்டது. இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள மூன்று ரகசியங்களை தெரிந்து கொண்டால் வீட்டிலேயே திருப்பதி லட்டு தயாரிக்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு நெய்வேத்தியமாக படைக்கலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.
திருப்பதி லட்டு செய்யத் தேவையானவை
- கடலை மாவு
- சர்க்கரை
- டைமண்ட் கற்கண்டு
- பால்
- முந்திரி
- உலர் திராட்சை
- ஏலக்காய்
- பச்சை கற்பூரம்
- நெய்
- தண்ணீர்
- எண்ணெய்
- அரிசி மாவு
திருப்பதி லட்டு செய்முறை
- பாத்திரத்தில் ஐந்து ஸ்பூன் அரிசி மாவு, எட்டு ஸ்பூன் சர்க்கரை, 150 மில்லி லிட்டர் காய்ச்சாத பால் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்யவும்.
- அடுத்ததாக 150 கிராம் கடலை மாவு சேர்த்து விஸ்கர் வைத்து கலக்கவும்.
- சூப்பரான திருப்பதி லட்டு செய்வதற்கு மூன்று ரகசியங்களில் முதல் ரகசியம் கடலை மாவுடன் பால் சேர்ப்பது.
- இதையடுத்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து 150 கிராம் கடலை மாவு, 150 மில்லி லிட்டர் பால் சேர்த்து கலந்து விடவும். தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்.
- தோசை மாவின் பதத்தை விட கொஞ்சம் தண்ணீராக இருந்தால் போதுமானது.
- இப்போது கடாயில் கால் லிட்டர் எண்ணெய் ஊற்றி கால் லிட்டர் நெய் சேர்த்து வடி கூடை பயன்படுத்தி பூந்தி தயாரிக்கவும்.
- அதிகமாக தீ வைத்து எண்ணெய்யை சூடுபடுத்தி அதன் பிறகு மிதமான சூட்டில் பூந்தி பொரிக்கவும். பொன்னிறத்திற்கு மாறியவுடன் பூந்தியை எடுத்து வடிகட்டவும்.
- சூடு ஆறுவதற்கு பூந்தியை தனியாக வைத்து விட்டு சர்க்கரை பாகு தயாரிக்கலாம்.
- கடாயில் அரை கிலோ சர்க்கரை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு ஒரு கம்பி பதத்திற்கு பாகு தயாரிக்கவும்.
- இதையடுத்து மிக்ஸியில் பூந்தியை போட்டு கொரகொரப்பாக அரைக்கவும். அடுத்ததாக பச்சை கற்பூரத்தை பொடியாக்கி சர்க்கரை பாகில் சேர்க்கவும்.
- 5-6 ஏலக்காயை இடித்து போடவும். அடுப்பை ஆஃப் செய்து அரைத்த பூந்தி, டைமண்ட் கற்கண்டு, நெய்-ல் வறுத்த முந்திரி, உலர் திராட்சை மற்றும் நெய் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
- சில நிமிடங்களிலேயே இறுக ஆரம்பித்துவிடும். இறுதியாக இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி கொஞ்சம் காற்று செல்லும் அளவிற்கு 30 நிமிடங்களுக்கு மூடிவிடவும்.
- இப்போது பார்த்தால் லட்டு பிடிக்கும் பதம் கிடைத்துவிடும். திருப்பதி லட்டு சைஸிற்கு நீங்கள் தயாரித்த லட்டை உருண்டை பிடித்து 2 மணி நேரத்திற்கு அப்படியே விட்டுவிடுங்கள்.
- இரண்டாவது மற்றும் மூன்றாவது ரகசியம் என்னவென்றால் பச்சை கற்பூரம் சேர்ப்பது மற்றும் நெய்யில் பூந்தியை பொரிப்பது.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation