மீன்ல ப்ரைட் ரைஸ் செய்யலாமா? உங்களுக்கான ரெசிபி டிப்ஸ் இங்கே

உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மீன்களை வைத்து ருசியான ப்ரைட் ரைஸ் செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எப்படி செய்யலாம் என்பது குறித்த ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக.
image

இன்றைக்கு குழந்தைகள் ஹோட்டலுக்குச் சென்றாலே முதலில் ஆர்டர் செய்வது நூடுல்ஸ் அல்லது பிரைட் ரைஸாகத் தான் இருக்கும். அதற்கு ஏற்ப கடைகளிலும் சிக்கன், முட்டை, வெஜிடபிள், பனீர், காளான், கோபி ப்ரைட் ரைஸ் என பல வகைகள் உள்ளது. மிளகுத்தூள், கரம் மசாலா உள்ளிட்ட சுவைக்கு ஏற்ப பல மசாலாப் பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்படும் பிரைட் ரைஸ்களை தக்காளி சாஸ் மற்றும் சில்லி சாஸ்களை வைத்து சாப்பிட குழந்தைகள் அதிக ஆசைப்படுவார்கள். இந்த சுவையோடு உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால், ஒருமுறையாவது மீன்களை வைத்து சுவையான பிரைடு ரைஸ் சாப்பிட முயற்சி செய்யுங்கள். இதுவரை செய்தது இல்லையென்றால் உங்களுக்கான ரெசிபி டிப்ஸ்கள் இங்கே.

நாவிற்குச் சுவையூட்டும் மீன் பிரைடு ரைஸ்:

தேவையான பொருட்கள்:

  • மீன் - கால் கிலோ
  • பெரிய வெங்காயம் - 2
  • உப்பு- சுவைக்கு ஏற்ப
  • முட்டைக்கோஸ் துருவல்- சிறிதளவு
  • எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்
  • மிளகுத்தூள்- சிறிதளவு
  • சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
  • தக்காளி சாஸ் - அரை டீஸ்பூன்
  • பாஸ்மதி அரிசி - 2 கப்

மேலும் படிக்க:காலிபிளவரில் சீஸ் செய்துப் பாருங்க; வேணாம்னு சொல்பவர்கள் கூட இனி விரும்பி சாப்பிடுவார்கள்

மீன் பிரைடு ரைஸ் செய்முறை:

  • மீன்களை வைத்து ப்ரைடு செய்வதற்கு முதலில் மீன்களை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும்.
  • பின்னர் மீன்களைப் பொரிப்பதற்கு என்னென்ன மசாலாக்கள் உபயோகிப்பீர்களோ? அதையெல்லாம் பயன்படுத்தி எண்ணெய் பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க:குழந்தைகளின் மதிய உணவிற்கு சுவையான குடை மிளகாய் புலாவ் செய்முறை

  • பொரித்த மீனின் சூடு ஆறியதும் அதில் உள்ள சதையை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இதையடுத்து ஒரு பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி நீளவாக்கில் நறுக்கிய கேரட், வெங்காயம், முட்டைக்கோஸ் போன்றவற்றைச் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.
  • ஒரு 2 நிமிடங்களுக்குப் பிறகு வதக்கிக் கொண்டிருக்கும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளுடன் தக்காளி சாஸ், சோயா சாஸ், மிளகுத்தூள், கரம் மசாலா போன்றவற்றைச் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்.
  • இவையனைத்தும் ஓரளவிற்கு வெந்தவுடன் ஏற்கனவே பாதி அளவிற்கு வேக வைத்து எடுத்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து மசாலா பதம் சேரும் வரை சில நிமிடங்களுக்கு கிளறவும்.

இறுதியாக பொரித்து எடுத்து வைத்துள்ள மீனின் சதை பகுதியைச் சேர்த்து கிளறிவிட்டால் போதும். சுவையான மீன் ப்ரைடு ரைஸ் ரெடி. ஒருவேளை உங்களுக்கு அதிக காரம் தேவைப்பட்டால் இறுதியாக மீன் ப்ரைடு ரைஸை இறக்கி வைக்கும் போது மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைகளை இறுதியாக தூவி தக்காளி சாசுடன் குழந்தைகளுக்குக் கொடுக்கவும். நிச்சயம் மீண்டும் மீண்டும் விரும்பி சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP