herzindagi
image

கிராம்பு தண்ணீர் ஒன்று போதும்; எவ்வித உடல் நல பிரச்சனைகளும் தீர்வு காண முடியும்

கிராமில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள்  உடலுக்கு பல வகைகளில் ஆற்றலை அளிக்கிறது. இதனை அப்படியே சாப்பிடுவதை விட ஊற வைத்து தண்ணீராக குடிக்கும் போது அதன் ஆற்றலை முழுமைாக பெற முடியும்.
Editorial
Updated:- 2025-11-04, 22:53 IST

உடலை எப்போதும் ஆற்றலுடன் வைத்திருக்க வேண்டும் என்றால், அதற்கேற்ப உணவுமுறைகளில் மற்றும் வாழ்வியல் முறைகளில் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். உடற்பயிற்சி செய்வது தொடங்கி ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது முதல் பல வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த வரிசையில் இன்றைக்கு கிராம்பை உணவில் சேர்த்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகளைப் பெற முடியும்? எப்படி இதை உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்? என்பது குறித்த விரிவான தகவல்கள் இங்கே.

மேலும் படிக்க: 30 வயதுக்கு மேல் பெண்களுக்கு ஏற்படும் இதய நோய் பிரச்சனைகளை நிர்வகிக்கும் முறை

உடல் ஆரோக்கியத்திற்கு கிராம்பு நீர்:

வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டகள் நிறைந்த கிராம்பை அப்படியே சாப்பிடலாம். அல்லது சிறிதளவு கிராம்பு எடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 15 முதல் 20 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றினால் அரை டம்ளர் வரும் அளவிற்கு கொதிக்க வைக்கவும். பின்னர் இதை வடிகட்டி கொஞ்சம் சூடு ஆறியதும் குடிக்கவும். இதை தினமும் காலையில் குடிக்கும் போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல வகைகளில் ஆற்றலை அளிக்கும்.


கிராம்பு மற்றும் ஆரோக்கிய நன்மைகள்:


தினமும் காலையில் வெறும் வயிற்றில் அல்லது உணவிற்குப் பின்னதாக நேரம் கிடைக்கும் போது கிராம்பு நீரைக் குடிக்கும் போது, உடலின் செரிமான சீராக அமையும். இதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு செல் சேதத்தை எதிர்த்துப் போராடும் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளைப் பெற உதவுகிறது.

மேலும் படிக்க : கூர்மையான கண் பார்வைக்கு நீங்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ

  • வயிற்றுப் பிரச்சனை, வாயு தொல்லை, வயிற்று வலி வயிற்று உப்பிசம் போன்ற பல்வேறு உடல் நல பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் கிராம்பு நீரைத் தொடர்ச்சியாக பருகி வருவது நல்லது. இதனால் உடலின் செரிமானம் சீராக அமைவதோடு மேற்கூறிய பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகளும் வழங்குகிறது.
  • உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைய செய்து உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவுகிறது.
  • பல் வலி போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களும் எவ்வித தயக்கம் இன்றி கிராம்பு நீரைப் பயன்படுத்தலாம்.

 Image credit - freep

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com