Ragi Ribbon Pakoda : இனி கடையில் ஸ்னாக்ஸ் வாங்கவே மாட்டீங்க, சிம்பிள் & ஹெல்த்தி ராகி ரிப்பன் பக்கோடா ரெசிபி!

சுவையில் சமரசம் செய்யாமல் ஆரோக்கியாக சமைக்க முடியுமா? நிச்சயம் முடியும். சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த ராகி ரிப்பன் பக்கோடா செய்ய கற்றுக்கொள்வோம்…

ragi ribbon pakoda easy

மழை காலத்தில் மட்டுமல்ல எல்லா பருவ காலங்களிலும் ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். வெயில் என்ன, மழை என்ன உணவை ரசித்து சாப்பிடுங்கள், மென்று பொறுமையாக சாப்பிடுங்கள். உணவின் ஜீரணம் வாயில் இருந்தே தொடங்குகிறது. எனவே ஒவ்வொரு பிடி உணவையும் பொறுமையாக மென்று சாப்பிடுஙகள். இந்த முறையில் சாப்பிட்டால் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம் இதனுடன் உங்கள் செரிமான செயல்முறையும் எளிதாக நடக்கும்.

முறையாக சாப்பிட்டாலும் பசியை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் தான். குறிப்பாக உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் எதையாவது சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகவே இருக்கும். இந்த சூழலில் தான் பலரும் ஆரோக்கியமற்ற பல உணவுகளை சிற்றண்டியாக சாப்பிடுகிறார்கள். அடிக்கடி ஸ்னாக்ஸ் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பேக் செய்யப்பட்ட ஸ்னாக்ஸ்களை கொடுப்பதற்கு பதிலாக வீட்டில் செய்யப்பட்ட ஸ்னாக்ஸ், பழங்கள்,சுண்டல் மற்றும் நட்ஸ் வகைகளை சிற்றுண்டியாக கொடுப்பது நல்லது. அந்த வகையில் ஒரு ஹெல்தியான ஸ்னாக்ஸ் ரெசிபியான ராகி ரிப்பன் பக்கோடாவின் செய்முறையை இன்றைய பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ragi snacks recipe

  • ராகி மாவு - 1/4 கப்
  • கடலை மாவு - 1/4 கப்
  • அரிசி மாவு - ¼ கப்
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  • எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
  • தண்ணீர் - தேவையான அளவு
  • எள்ளு - 1 டீஸ்பூன்

செய்முறை

ragi recipes

  • முதலில் ராகி மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, எள்ளு, பெருங்காயம் மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும்.
  • இந்த பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர கலந்த பின்னரே தண்ணீர் சேர்க்க வேண்டும். ஆரம்பத்திலேயே தண்ணீர் சேர்த்து விட்டால் பக்கோடா மொறுமொறுப்பாக வராது.
  • நீங்கள் விரும்பினால் மிளகாய் பொடிக்கு பதிலாக மிளகுத்தூளை பயன்படுத்தலாம். அல்லது காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டை சேர்த்து அரைத்தும் மாவில் கலந்து கொள்ளலாம்.
  • இப்போது கலந்து வைத்துள்ள மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவு பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்து வைத்துள்ள மாவை எண்ணெய் தடவி ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
  • இப்போது முறுக்கு குழலில் ரிப்பன் பக்கோடா செய்வதற்கான அச்சை போடவும். மறுபுறம் கடாயில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  • தயாராக வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி முறுக்கு குழலில் போடவும். சூடாக இருக்கும் எண்ணெயில் பக்கோடாவை பிழிந்து, மொறுமொறுப்பாக வேகம் வரை பொறித்தெடுக்கவும்.
  • இதனை ஆறிய காற்று புகாத ஒரு பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
  • சத்துக்கள் நிறைந்த இந்த ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிபியை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் இது போன்ற ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் வகைகளை பேக் செய்து கொடுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நாவில் கரையும் அட்டகாசமான பலாப்பழ கேசரி, ஒரு முறை செஞ்சு பாருங்க!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP