சுவையான மாலை நேர சாட் ஐயிட்டங்கள் லிஸ்டில் இந்தியா முழுவதும் பலராலும் விரும்பப்படுகிறது பானி பூரி. நம்மூரில் பானி பூரி, ஆனால் இந்தியா முழுவதும் இதற்கு ஒரு டஜன் பெயர்கள் உள்ளன. ரக்தா, கோல் கப்பே, குப் சுப், பானி கே படாஷே, புல்கிஸ்,ஃபுச்கா இவை அனைத்தும் பானி பூரிக்கான மற்றொரு பெயர்கள். உலக அளவிலான நொறுக்குத்தீனி சந்தையில் பிரபலமாக உள்ள பிட்சா, பர்கர், மோமோஸ் வரிசையில் பானி பூரியும் ஒன்று என்றால் அது மிகையல்ல.
அந்த அளவுக்கு எல்லா மாநிலங்களிலும் பானி பூரி தனது சுவையால் நாக்கை ஆக்கிரமித்து வருகிறது. உண்மையில் பானி பூரி எப்படி தோன்றியது என்பதற்கு சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால் மகாபாரத்தில் திரெளபதியால் பானி பூரி அறிமுகம் செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் இந்தியாவில் பல ஆண்டுகளாக பரவி வருகிறது. கங்கை கரையில் உள்ள மகத நாட்டில் தோன்றி அங்கிருந்து பல மாநிலங்களுக்கு பரவி தற்போது தமிழகத்திலும் இளம் தலைமுறை விரும்பும் சாட் உணவாக மாறியுள்ளது பானி பூரி.
சென்னையில் பானி பூரி கடை போட்டால் பிழைத்து கொள்ளலாம் என்ற அளவுக்கு நிலை வந்துவிட்டது. ஆனால் அதே நேரம், பானி பூரி செய்முறை, தயாரிப்பு ஆகியவற்றில் ஆரோக்கியம் குறித்த கேள்விகளும் முன் வைக்கப்படுகின்றன. குறிப்பாக குழந்தைகள் இதை அதிகம் உண்ண வேண்டாம் எனவும் அறிவுருத்தப்படுகிறது. எனவே, வெளியில் வாங்கி சாப்பிட ரிஸ்க் எடுக்காதவர்கள் வீட்டிலேயே இதை ஆரோக்கியமாக செய்து சாப்பிடலாம். அதற்கான செய்முறையை இங்கு பகிர்கிறோம்.
தேவையான பொருட்கள்
- ரவை – 1 கப்
- மைதா – 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- புளி தண்ணீர் – 1 கப்
- வெல்லம் – ¼ கப்
- பேரீச்சை பழம் – 6
- கொத்தமல்லி – ½ கப்
- புதினா – ½ கப்
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி – 1 துண்டு
- எலுமிச்சை – 1
- மிளகு – ¼ டீஸ்பூன்
- சீரக தூள் – 1 டீஸ்பூன்
- வேக வைத்த உருளைக்கிழங்கு – 2
- வேக வைத்த கொண்டைக்கடலை – ½ கப்
- மிளகாய் தூள் – தேவையான அளவு
- நறுக்கிய வெங்காயம் - 1
செய்முறை
- முதலில் ஒரு கிண்ணத்தில் ரவை, மைதா மாவு, ½ டீஸ்பூன் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் நன்கு பிசையவும்.
- மாவை மிருதுவாக பிசைந்ததும், அதை ஈர துணியால் மூடி 30 நிமிடம் அப்படியே விடவும். மாவு நன்கு ஊறி உப்பி வரும்.
- இப்போது, அடுப்பில் கடாயை வைத்து அதில் புளி தண்ணீர், வெல்லம், பேரீச்சை பழம், ½ டீஸ்பூன் மிளகாய் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- கலவை நன்கு கொதித்து ஆறியதும், அதை மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும். இப்போது புளி சட்னி தயார்.
- அடுத்து, புதினா இலையுடன், கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, எலுமிச்சை சாறு, மிளகு, சீரக தூள், சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.
- அதை வடிக்கட்டி, 1 கப் தண்ணீர் சேர்க்கவும். இப்போது கிரீன் சட்னி தயார்.
- வேக வைத்த உருளைக்கிழங்குடன் கொண்டைக்கடலை, வெங்காயம், காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், சீரக தூள் அல்லது சாட் மசாலா, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். இப்போது பூரிக்கு நடுவில் வைக்கும் மசாலாவும் தயார்.
- கடைசியாக ஊற வைத்துள்ள மாவை வட்டமாக தட்டி, அதிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக பூரிக்கு எடுத்து அதை காய்ந்த எண்ணெய்யில் போட்டு பொரிக்கவும்.
- பூரி நன்கு பொன்னிறமாக வரும் வரை காத்திருந்து பக்குவமாய் பொரித்து எடுக்கவும்.
பானி பூரி ரெடி
- இப்போது பானி பூரிக்கு தேவையான அனைத்தும் தயார்.
- பொரித்த பூரிக்கு நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து அதில் புளி சட்னி வைத்து, கிரீன் சட்டினியில் மூழ்கி வாயில் போட்டால் பானி பூரி அப்படியே கரையும்.
இந்த பதிவும் உதவலாம்:பெங்களூரு ஸ்பெஷல் தட்டு இட்லி ரெசிபி!
நீங்களும், வீட்டில் இந்த பானி பூரி ரெசிபியை கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation