பிரியாணி என்றால் யாருக்கு தான் பிடிக்காது, ஒரு சிலர் வாரத்தில் ஏழு நாளும் பிரியாணி சாப்பிட தயாராக இருப்பார்கள். பொதுவாகவே இன்றைய காலத்தில் இளைஞர்கள் மத்தியில் இந்த பிரியாணி பிரபலமான ஒரு உணவாக மாறிவிட்டது. ஒரு சில சமயம் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் வீட்டில் அசைவம் சமைத்து தர முடியாமல் போகலாம். இந்த நிலையில் சைவ பிரியாணி செய்து பாருங்கள். அந்த வரிசையில் வட இந்தியாவில் மிகவும் பிரபலமான பனீர் மக்கானி பிரியாணி செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பன்னீர் பிரியாணியை விரும்பி சாப்பிடுவார்கள் அதே போல உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் கூட தாராளமாக இந்த பனீர் பிரியாணியை சாப்பிடலாம். பனீரில் நிறைந்துள்ள புரதச்சத்து உடல் எடையை குறைபோருக்கு பெரிதும் உதவுகிறது.
சுவையான பனீர் மக்கானி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
- 300 கிராம் பனீர்
- ஒரு கப் சீரக சம்பா அல்லது பாஸ்மதி அரிசி
- பனீரை பொரித்து எடுக்க தேவையான அளவு எண்ணெய்
- இரண்டு தக்காளி
- இரண்டு வெங்காயம்
- ஒரு கப் தயிர்
- நான்கு பிரியாணி இலை
- ஏழு டேபிள்ஸ்பூன் நெய்
- அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
- கைப்பிடி அளவு கொத்தமல்லி
- கைப்பிடி அளவு புதினா
- அரை டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
- அரை டேபிள் ஸ்பூன் தனியா தூள்
- 50 கிராம் முந்திரிப்பருப்பு
- தேவையான அளவு உப்பு
- 4 மிளகாய் வற்றல்
- 2 பச்சை மிளகாய்
- ஒரு சிறு துண்டு பட்டை
- இரண்டு கிராம்பு
- ஒரு டேபிள் ஸ்பூன் கசகசா
- 2 ஏலக்காய்
- 6 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய்
- ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு
- ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம்
சுவையான பனீர் மக்கானி பிரியாணி செய்முறை:
முதலில் பனீரை சிறு துண்டுகளாக வெட்டி அதில் அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து குறைந்தது 30 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும். பிறகு இந்த பனீரை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதே எண்ணெயில் முந்திரி பருப்பையும் பொறித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். இதற்கு பிறகு தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லியை பொடி பொடியாக நறுக்க வேண்டும். பிறகு அரிசியை கழுவி ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
இதற்கு பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் ஊற்றி தேங்காய் துருவல் தவிர அரைக்கும் பொருட்கள் அனைத்தையும் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது நன்கு சூடு ஆறிய பிறகு ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இப்போது அந்த தேங்காய் துருவலையும் அதே மிக்சியில் சேர்த்து அரைக்க வேண்டும். இதனை தொடர்ந்து ஒரு குக்கரில் சிறிதளவு நெய் விட்டு அது சூடானதும் பிரியாணி இலையை போட்டு தாளிக்க வேண்டும். பிறகு நாம் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்று வறுக்கவும். அதே குக்கரில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அது பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும். இப்போது தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனை அடுத்து நாம் அரைத்த விழுதையும் தனியா தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள்களையும் புதினா கொத்தமல்லி தலைகளையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். சிறிது நேரம் பிறகு அரிசியுடன் உப்பும் தயிரும் சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி விடலாம். குக்கர் இரண்டு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து பத்து நிமிடங்கள் பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இந்த விசில் நின்றவுடன் குக்கரை மெதுவாக திறந்து பொரித்து வைத்துள்ள பனீர், முந்திரி, ஒரு டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் சிறிதளவு கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கினால் சுவையான பனீர் மக்காணி பிரியாணி ரெடி.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation