அடிச்சிக்க முடியாத சுவையில் அப்பள குழம்பு செய்முறை, காய்கறி தேவையில்லை

வீட்டில் காய்கறி இல்லையென்றாலும் அரை மணி நேரத்தில் சுவையான அப்பள குழம்பு தயாரிக்கலாம். வெங்காயம், தக்காளி இன்றி அப்பள குழம்பு செய்யலாம்.வீட்டில் எண்ணெயும் அப்பளமும் இருந்தால் அப்பள குழம்பு ரெடி.
image

தினமும் என்ன குழம்பு வைக்கலாம் ? சமையல் செய்தாக வேண்டும் என்ற யோசனையிலேயே பெண்களுக்கு பாதி நேரம் போய்விடும். சிலர் எளிதில் ரசம் வைத்துவிடலாம் என நினைப்பர். அதை விட எளிதாக செய்யக்கூடிய குழம்பு தான் அப்பள குழம்பு. சாம்பார் பொடி, அப்பளம், எண்ணெய் இருந்தால் 25-30 நிமிடங்களில் அப்பள குழம்பு ரெடி. சாதத்தில் நேரடியாக ஊற்றி சைட் டிஷ் இன்றி சாப்பிடலாம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்க்கலாம். எந்த இடத்தில் அதை சேர்க்க வேண்டும், எந்த இடத்தில் தவிர்த்து சமைக்க வேண்டும் என்ற சமையல் குறிப்பும் உள்ளது.

appalam kulambu

அப்பள குழம்பு செய்ய தேவையானவை

  • அப்பளம்
  • காய்ந்த மிளகாய்
  • பூண்டு
  • சின்ன வெங்காயம்
  • தக்காளி
  • மஞ்சள் தூள்
  • நல்லெண்ணெய்
  • கடுகு
  • கறிவேப்பிலை
  • பெருங்காய தூள்
  • சாம்பார் தூள்
  • தண்ணீர்
  • புளி தண்ணீர்
  • வெல்லம்
  • வெந்தயம்

மேலும் படிங்க அருமையான அரைச்சுவிட்ட சாம்பார் ருசிக்க துல்லியமான ரெசிபி; வீட்டு விருந்து

அப்பள குழம்பு செய்முறை

  • கடாயில் 25 மில்லி நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் 5 காய்ந்த மிளகாய் போடுங்கள். இதன் பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு போடவும்.
  • கடுகு வெடித்தவுடன் கால் ஸ்பூன் வெந்தயம், கொஞ்சம் கறிவேப்பிலை, பத்து பல் பூண்டு, 15 சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • சின்ன வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு இரண்டு மீடியம் சைஸ் தக்காளியை நறுக்கி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். ( காய்கறி தவிர்க்க அடுத்து நேரடியாக மஞ்சள் தூள் போடலாம் ).
  • அடுத்ததாக கால் ஸ்பூன் மஞ்சள், ஒரு டீஸ்பூன் பெருங்காய தூள், தேவையான அளவு உப்பு, இரண்டு டீஸ்பூன் சாம்பார் தூள், அரை ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
  • இரண்டு கொதி வந்த பிறகு எலுமிச்சை சைஸ் புளியை 200 மில்லி தண்ணீரில் கரைத்து கடாயில் ஊற்றி வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.
  • சுவையை சற்று அதிகரிக்க ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்க்கவும். மீண்டும் 250 மில்லி தண்ணீர் ஊற்றுங்கள்.
  • 8 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்கட்டும். அடுத்ததாக 5-6 அப்பளங்களை இரண்டாக உடைத்து குழம்பில் போட்டு 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள்.
  • இறுதியாக ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தனியாக வறுத்து மிக்ஸியில் அரைத்து அதில் பாதி ஸ்பூனை இந்த குழம்பில் போட்டு அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள்.

ஒரு மணி நேரத்திற்கு அப்பளங்கள் ஊறட்டும். அதன் பிறகு சாப்பிட்டு பாருங்கள் இந்த குழம்பின் ருசியை வேறு எதோடும் ஒப்பிட முடியாது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP