தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை அன்று இந்தாண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்திட கடவுளுக்கு சர்க்கரை பொங்கலை படையலிட்டு வணங்குவோம். ஆனால் சாமி கும்பிடும் நேரம் தவறி விடக்கூடாது என்பதற்காக சர்க்கரை பொங்கல் செய்வதற்கு பதிலாக வெண் பொங்கல் செய்யலாம் என நினைப்போம். அப்படி வெண் பொங்கல் செய்ய விரும்பும் நபர்களுக்காகவே இந்த ரெசிபி
வெண் பொங்கல் செய்யத் தேவையானவை
- பச்சரிசி
- பாசி பருப்பு
- நெய்
- தண்ணீர்
- பிஞ்சு கறிவேப்பிலை
- கம் பெருங்காயம்
- இஞ்சி
- உப்பு
- முந்திரி
- சீரகம்
- மிளகு

கவனம் கொள்க
வெண் பொங்கல் செய்யத் தேவையான பச்சரிசி மிகவும் பழைய பச்சரியாக இருக்கக் கூடாது. ஏனென்றால் பொங்கல் சற்று குளைந்து இருந்தால் தான் சாப்பிட நன்றாக இருக்கும். எனவே இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அறுவடை செய்யப்பட்ட புதிய பச்சரிசியை வெண் பொங்கல் செய்ய பயன்படுத்தவும்.
பொங்கல் செய்வதற்கு எக்காரணம் கொண்டும் கடைகளில் கிடைக்கும் பெருங்காய தூள் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக கம் பெருங்காயத்தை வாங்கிக் கொள்ளவும். புளி தண்ணீர் போல கம் பெருங்காயத்தை சுடு தண்ணீரில் அரை மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
இறுதியாகப் பொங்கலுக்கு பயன்படுத்தும் கறிவேப்பிலை மிகவும் காய்ந்து இருக்க கூடாது. பிஞ்சு அல்லது புதிய கறிவேப்பிலையாக இருக்க வேண்டும்.
மேலும் படிங்கபொங்கல் பண்டிகைக்கு தித்திப்பான சர்க்கரை பொங்கல் ரெசிபி!
செய்முறை
- 250 கிராம் கப் ஒன்றில் முழுவதும் பச்சரிசி எடுத்துக் கொள்ளவும், அதே அளவிற்கு பாசி பருப்பும் பயன்படுத்த வேண்டும்
- இவற்றைக் குக்கரில் போடும் முன்பாகத் தண்ணீரில் மூன்று முதல் நான்கு முறை கழுவவும்
- கழுவிய பிறகு பச்சரிசியையும், பாசி பருப்பையும் ஒன்றாக குக்கரில் போட்டு கால் ஸ்பூன் நெய் சேர்க்கவும்
- குக்கரில் இவற்றை வேக வைக்க பச்சரிசி எடுக்க பயன்படுத்திய கப் அளவில் 3 ¾ கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதில் சற்று கவனமாக இருங்கள், தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட்டால் பொங்கல் எதிர்பார்த்ததை விட அதிகமாகக் குளைந்துவிடும்.
- குக்கரை நன்றாக மூடிவிட்டு மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை ஆஃப் செய்து விடவும். ஆனால் குக்கரை திறக்கக் கூடாது. குறைந்தது பத்து நிமிடங்களுக்கு அடுப்பில் இருந்து எடுத்த சூட்டில் பொங்கல் குக்கரினில் வேகும்.
- தற்போது ஒரு பேனில் 80 கிராம் நெய் ஊற்றி அது சூடான பிறகு ஒரு ஸ்பூன் மிளகு போடவும்
- மிளகு பொறிந்தவுடன் முக்கால் டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும்
- அடுத்ததாக 30 கிராம் இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் போடவும்
- இதனுடன் தேவையான அளவு முந்திரி பருப்பு, 30 மில்லி கம் பெருங்காய தண்ணீர், பிஞ்சு கறிவேப்பிலை போட்டு நெய்யில் வதக்கவும்
- ஏறக்குறைய 90 விழுக்காடு வேலை முடிந்துவிட்டது.
- தற்போது குக்கரை திறந்து நெய்யில் வதக்கியதை கொட்டி அதில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- மேலும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறிவிட்டு குக்கரை மூடிவிட்டு 20 நிமிடங்களுக்குக் காத்திருங்கள்.
- நீங்கள் எதிர்பார்த்த நெய் பொங்கல் அல்லது வெண் பொங்கல் தயார்.
மேலும் படிங்கமொறு மொறு சுவை கொண்ட மெதுவடை

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation