கும்பகோணம் டிகிரி காபி போடுவது எப்படி என தெரியுமா?

வரலாற்று புகழ்மிக்க கும்பகோணம் பில்டர் காபி பக்குவமாய் போடுவது எப்படி? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

kumbakonam degree coffee recipe
kumbakonam degree coffee recipe

கும்பகோணம் என்று சொன்னதும் கோயில்களைத் தாண்டி அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கும்பகோணம் பில்டர் காபி தான். பித்தளை அல்லது செம்பில் இருக்கும் டம்ளர் டவரா செட்கள் தான் அக்மார்க் கும்பகோண பில்டர் காபியின் முத்திரை. பசும்பாலைக் கறந்து எடுத்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாகக் காய்ச்சி, அதில் ஸ்பெஷலாக வறுத்து அரைத்த காபித் தூளை கொண்டு தயாரிக்கப்பட்ட டிக்காஷன் சேர்த்து, டவரா செட்டில் கொடுக்கப்படும் கும்பகோணம் பில்டர் காபியின் ருசி உலகம் அறிந்த ஒன்று. இதைத் தமிழர்களுக்கு அறிமுகம் செய்தது கும்பகோணம் பஞ்சாமி ஐயர்.

கும்பகோணத்தில் நடக்கும் இசை கச்சேரிகளுக்கு வருகை தந்த இசை வித்வான்களுக்கு இந்த காபியின் ருசி பிடித்துப் போக, அவர்கள் செல்லும் இடமெல்லாம் பஞ்சாமி ஐயரின் பில்டர் காபி பற்றிப் பேசக் காலப்போக்கில் அதற்கு கும்பகோணம் டிகிரி காபி என்ற பெயரும் வந்தது.

என்னதான் காபி பரிமாண வளர்ச்சி அடைந்து இன்ஸ்டன்ட் காபி, எஸ்ப்ரஸோ, கேப்பச்சினோ, லாட்டே, மச்சியாட்டோ, ஐரிஷ், ட்ரசிஸ் எனப் பல வகைகளில் வந்தாலும் இன்றளவும் கும்பகோணம் டிகிரி காபிக்கு நிகர் வேறில்லை. இந்த காபியின் ரகசியம் வறுத்து அரைக்கப்படும் காபி தூளில் மறைந்துள்ளது. உலகம் முழுவதும் பல இடங்களில் கும்பகோணம் டிகிரி காபி தூள் விற்கப்படுகிறது. இதை வாங்கி வீட்டிலேயே காபி போட்டுக் குடிக்கலாம். ஆனால் அதை பக்குவமாய் சரியான அளவில் போடுவது எப்படி? என்பதை இந்தப் பதிவில் விவரிக்கிறோம். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

prepare kumbakonam degree coffee

  • கும்பகோணம் டிகிரி காபி பொடி – 4 டேபிள் ஸ்பூன்
  • பால் – ½ லிட்டர்
  • சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  • பின்பு காபி பில்டரை எடுத்து அதில் காபி பொடியை சேர்த்து சல்லடை போல் இருக்கும் தட்டை வைத்து மூடவும்.
  • பின்பு அதன் மேல் கொதிக்கும் நீரை பில்டர் நிரம்பும் வரை ஊற்றி மூடி விடவும்.
  • இதை 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்து டிக்காஷன் வடியும் வரை காத்திருக்கவும்.

how to prepare kumbakonam degree coffee

  • பின்பு பாலில் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக காய்ச்சவும்.
  • ஒரு டம்ளரில், தயார் செய்த டிக்காஷனை 1 பங்கு சேர்த்து அதில் 3 பங்கு பால் ஊற்றி 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும்.

இந்த பதிவும் உதவலாம்: புத்தாண்டு தினத்தன்று செய்து சுவைக்க வேண்டிய அல்வா ரெசிபிக்கள்!!!


  • ஒரு நபர் குடிப்பதற்கான பில்டர் காபியின் சரியான அளவு இதுதான்.
  • இப்போது காபியை பக்குவமாய் நுரைபொங்க ஆற்றி குடிக்கவும்.

பாரம்பரியமான கும்பகோணம் பில்டர் காபியைப் பக்குவமாய் போடுவது எப்படி? என்பது இப்போது உங்களுக்கு தெரிந்து இருக்கும். நீங்களும் வீட்டில் இதை முயற்சி செய்து பார்த்து காலை அல்லது மாலை நேரத்தில் சூப்பரான பில்டர் காபி குடியுங்கள்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP