
Hair care tips: நீளமான, அடர்த்தியான கூந்தலை பெறுவது என்பது விலையுயர்ந்த ஷாம்புகளை பயன்படுத்துவது மட்டுமல்ல; இது தினசரி பழக்கவழக்கங்கள், சரியான உணவு மற்றும் உங்கள் உச்சந்தலையை கவனத்துடன் பராமரிப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தக் குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றினால், உங்கள் கூந்தலின் இயற்கையான ஆரோக்கியமும், வளர்ச்சியும் சீராக அதிகரிக்கும்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவு:
கூந்தல் வேர்களுக்கு தேவையான அத்தியாவசிய சத்துகளாக புரதம், இரும்புச்சத்து, சின்க் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, டி, ஈ ஆகியவை இருக்கின்றன. இவை போதுமான அளவு இல்லையென்றால், கூந்தல் வளர்ச்சி குறைந்து உதிர்வு அதிகரிக்கும். இதற்காக உங்கள் உணவில் இறைச்சிகள், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் விதைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
உச்சந்தலையை ஆரோக்கியமாக பராமரித்தால் கூந்தல் வளர்ச்சி அதிகமாக இருக்கும். உங்கள் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருங்கள். அதிகப்படியான எண்ணெய் அல்லது இரசாயன பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், கூந்தல் வேர்களுக்கு ஊட்டச்சத்துகளை வழங்கவும் மசாஜ் செய்யலாம்.

மேலும் படிக்க: முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் தேன்; கூந்தல் பராமரிப்பில் இப்படி யூஸ் பண்ணுங்க
ஸ்ட்ரெய்ட்னர்கள், கர்லிங் அயர்ன்கள், அதிகப்படியான இரசாயனங்கள் அல்லது ப்ளீச்சிங் போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்துவது கூந்தலை பலவீனப்படுத்துகிறது. மேலும், முடியின் வளர்ச்சியை குறைக்கிறது. எனவே, இது போன்ற பொருட்களை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கூந்தலை பாதுகாக்கும் சீரம் (Protective Serums) பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க: முடி வளர்ச்சிக்கு கடுகு எண்ணெய்; அடர்த்தியான கூந்தலை பெற இதை ட்ரை பண்ணுங்க
இறுக்கமான கொண்டை (Buns) அல்லது பின்னல்கள் போன்ற சிகை அலங்காரங்கள் கூந்தல் வேர்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இது முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, தளர்வான சிகை அலங்காரங்கள் மற்றும் மென்மையான கூந்தல் உபகரணங்களை பயன்படுத்தவும்.

அதிகப்படியான மன அழுத்தம் கார்டிசோல் (Cortisol) அளவை அதிகரிக்கிறது. இது கூந்தல் வளர்ச்சியை கெடுக்கிறது. மேலும், தூக்கமின்மை உடலின் செயல்முறைகளை பாதிக்கிறது. தியானம் மற்றும் உடற்பயிற்சி போன்ற நடைமுறைகளை மேற்கொள்ளலாம். கூடுதலாக, 7-9 மணி நேரம் கட்டாயம் உறங்க வேண்டும். இவை கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கும்.
எனினும், கூந்தல் தொடர்பான பிரச்சனைகள் மிக அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சரியான முறையில் சிகிச்சை பெறலாம். இது தேவையற்ற சிக்கல்களை தடுக்க உதவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com