கோடை விடுமுறையில் வீட்டில் குழந்தைகளே இருந்தாலே பெற்றோருக்கு ஒருவிதமான தொல்லை அனுபவிக்க வேண்டியிருக்கும். சாப்பிடுவதற்கு ஏதாவது கேட்டு அடம்பிடிப்பார்கள். பிடித்ததை செய்து கொடுக்கவில்லை எனில் பெற்றோரை ஒரு வழி செய்துவிடுவார்கள். பேக்கரிக்கு சென்றால் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தின்பண்டங்களில் முட்டை மிட்டாயும் ஒன்று. பார்ப்பதற்கு பஞ்சு போல உள்ளே இனிப்பாக இருக்கும். இதை எந்த குழந்தையும் வேண்டாம் என சொல்லமாட்டார்கள். இதை கடையில் வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே செய்ய முடியும். வாருங்கள் முட்டை மிட்டாய் எப்படி செய்வது என பார்ப்போம்.
முட்டை மிட்டாய் செய்ய தேவையானவை
- முட்டை
- சர்க்கரை
- கோவா
- பாதாம்
- நெய்
- பால்
- ஏலக்காய் தூள்
குறிப்பு - முட்டை மிட்டாய் செய்ய இனிப்பில்லாத கோவா அவசியம். இதை நீங்கள் கடைகளிலும் வாங்கலாம் அல்லது வீட்டிலேயே செய்யலாம்.
முட்டை மிட்டாய் செய்முறை
- கடாயில் ஒரு லிட்ட கொழுப்பு இல்லாத பால் ஊற்றி நன்கு சுண்ட காய்ச்சவும். பால் பாதியாக குறைந்து அதன் பிறகு கோவா ஆக மாறும்.
- அடிபிடிக்காமல் தொடர்ந்து கலந்து விட்டு கொண்டே இருக்கவும். இதில் 200 கிராம் அளவிற்கு கோவா கிடைக்கும். இதை மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்துவிடவும்.
- இதனிடையே 50 கிராம் பாதாமை 6 மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். தோல் உரித்து கால் டம்ளர் பால் ஊற்றி மிக்ஸியில் அரைக்கவும்.
- அனைத்தையும் சேர்த்து கால் கப் அளவிற்கு நெய் ஊற்றி விஸ்க் வைத்து நன்கு அடிக்கவும்.
- இதில் ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றி விஸ்க் வைத்து தொடர்ந்து கலந்துவிட்டு கொண்டே இருங்கள்.
- அடுத்ததாக 200 கிராம் சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் போடுங்கள்.
- மொத்ததையும் கடாய்க்கு மாற்றி அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சூடுபடுத்துங்கள். கொஞ்சம் கெட்டியாகும் வரை சூடுபடுத்தினால் போதுமானது.
- இப்போது பாதாம் பருப்பை பொடிதாக நறுக்கி மேலே தூவுங்கள். வீட்டில் பெரிய ஓவன் இருந்தால் 30 நிமிடங்களுக்கு 160 நிமிடங்களுக்கு பேக்கிங் செய்து எடுக்கவும்.
- குக்கரிலும் இதை நாம் செய்யலாம். சதுர வடிவ பாத்திரத்திற்கு மாற்றி குக்கரில் வைத்து 35 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் பேக்கிங் செய்யவும்.
- எடுக்கும் போது மேலே கொஞ்சமாக நெய் ஊற்றவும். 10-15 நிமிடங்களுக்கு பிறகு சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். குழந்தைகளிடம் அன்பு முத்தம் பெறுவீர்கள்.
மேலும் படிங்கசுவையான ஆற்காடு மக்கன் பேடா ஸ்வீட் ருசித்திட இதுவே செய்முறை
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation