herzindagi
image

ஸ்ரீலங்கன் கஹா பாத் செய்வது எப்படி தெரியுமா ? விருந்தாளிகளுக்கு ரொம்ப பிடிக்கும்

குக் வித் கோமாளியில் கல்யாண விருந்து வாரத்தில் ஷபானா செஃப் ஆப் தி வீக் விருது பெற சமைத்த ஸ்ரீலங்கன் கஹா பாத் ரெசிபி எப்படி செய்வது என பார்ப்போம். கஹா பாத் மிகவும் ருசியாக இருக்குமென பலரும் கூறுகின்றனர்.
Editorial
Updated:- 2025-07-25, 11:17 IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புதிதாக தெரிந்து கொண்ட ரெசிபி ஸ்ரீலங்கன் கஹா பாத். கல்யாண விருந்து வாரத்தில் ஷபானா கஹா பாத் செய்து செஃப் ஆப் தி வீக் விருதை வென்றார். கஹா பாத் இலங்கையில் கீரி சம்பா அரிசி கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதை நாம் பாஸ்மதி அரிசியிலும் செய்யலாம். இதற்கு மஞ்சள் சாதம் என மற்றொரு பெயரும் உண்டு. கஹா பாத் செய்வதற்கான பொருட்களை தவறாமல் வாங்கிவிடவும். ஒன்று குறைந்தாலும் கஹா பாத்-ன் முழு சுவையை பெற முடியாது.

srilankan yellow rice

கஹா பாத் செய்ய தேவையானவை

  • கீரி சம்பா அரிசி
  • தேங்காய் பால்
  • வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • லெமன்கிராஸ்
  • ரம்பை இலை
  • கறிவேப்பிலை
  • ஏலக்காய்
  • கிராம்பு
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • நெய்
  • நல்லெண்ணெய்

கஹா பாத் செய்முறை

  • கீரி சம்பா அரிசி அரை கிலோ எடுத்து அதை தண்ணீரில் இரண்டு முறை நன்கு கழுவவும்.
  • கடாயில் மூன்று ஸ்பூன் எண்ணெய், இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் சிறிய துண்டு லெமன்கிராஸ், இரண்டு மூன்று ரம்பை இலை, கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடத்திற்கு வறுக்கவும்.
  • கஹா பாத் மொத்த செய்முறையும் அடுப்பு குறைவான சூட்டில் இருக்க வேண்டும். இப்போது ஏழு ஏலக்காயை இடித்து சேருங்கள். எட்டு கிராம்பு போடவும். இவை நல்ல வாசனை கொடுக்கும்.
  • ஒரு நிமிடத்திற்கு வறுத்த பிறகு இரண்டு பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கி சேர்க்கவும். அடுத்ததாக ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி போடுங்கள்.
  • இதோடு பத்து உலர் திராட்சை சேர்க்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு கீரி சம்பா அரிசி போட்டு கலந்துவிடுங்கள்.
  • இதில் சுமார் 750 மில்லி தேங்காய் பால் ஊற்றவும். முக்கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு முழு ஸ்பூன் உப்பு போடுங்கள்.
  • மூடி போட்டு மூடி சுமார் 25 நிமிடத்திற்கு அரிசி வேகட்டும். மஞ்சள் சாதம் நன்கு வெந்த பிறகு பொடிதாக நறுக்கி வறுத்த ஒரு வெங்காயம், கொஞ்சம் கறிவேப்பிலையை மேலே தூவுங்கள்.
  • சுவையான கஹா பாத் ரெடி. வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் கஹா பாத் செய்து கொடுங்கள்.

மேலும் படிங்க   மைதா மாவு இருந்தால் 90ஸ் கிட்ஸ், குழந்தைகளுக்கு பிடித்த கலகலா செஞ்சு கொடுங்க

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com