மைதா மாவு இருந்தால் 90ஸ் கிட்ஸ், குழந்தைகளுக்கு பிடித்த கலகலா செஞ்சு கொடுங்க

90ஸ் கிட்ஸிற்கு பழைய நினைவுகளை தரக்கூடிய மிக பிடித்தமான கலகலா ரெசிபி எப்படி செய்வது என பார்க்கலாம். கலகலா செய்வதற்கு உங்களிடம் மைதா மாவு இருந்தால் போதுமானது.
image

தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் பேக்கரியில் இந்த கலகலா கிடைக்கும். மிக்சர், மசாலா கடலை, இனிப்புகள் வரிசையில் இதை அடுக்கி வைத்திருப்பார்கள். கொஞ்சம் மொறுமொறுப்பாக பட்டர் பிஸ்கட் சுவையில் கலகலா இருக்கும். இதை சிலர் மைதா பிஸ்கட் என்றும் அழைப்பர். 90ஸ் கிட்ஸிற்கு பிடித்தமான தின்பண்டங்களில் கலகலாவும் ஒன்று. இதை வீட்டில் செய்வதற்கு உங்களுக்கு இரண்டு கப் மைதா, கொஞ்சம் நெய் தேவைப்படும். இப்போதெல்லாம் அரிதாக ஒரு சில பேக்கரியில் மட்டுமே இந்த கலகலா கிடைக்கிறது. வீட்டில் குழந்தைகள் இருந்தால் கலகலா இரண்டு மூன்று நாட்களிலேயே காலியாகி விடும். வாருங்கள் கலகலா எப்படி செய்வது என பார்ப்போம்.

maida biscuits

கலகலா செய்ய தேவையானவை

  • மைதா மாவு
  • நெய்
  • சர்க்கரை
  • சமையல் சோடா
  • உப்பு
  • கடலெண்ணெய்
  • தண்ணீர்

கலகலா செய்முறை

  • ஒரு பவுடலில் அரை கப் சர்க்கரை எடுத்து அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி கரைக்கவும். சர்க்கரை கரைவதற்கு விஸ்க் வைத்து இரண்டு நிமிடங்களுக்கு கலக்கவும்.
  • தண்ணீரில் சர்க்கரை கரைந்த பிறகு கால் கப் நெய், அரை ஸ்பூன் உப்பு போட்டு மீண்டும் விஸ்க் வைத்து கலக்குங்கள்.
  • அடுத்ததாக ஒரு சிட்டிகை சமையல் சோடா, இரண்டு கப் மைதா மாவு சேருங்கள்.
  • சப்பாத்தி மாவு பிசைவது போல் இதை கைகளால் மாவு பிசையவும். தண்ணீர் தேவைப்பட்டால் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மாவு பிசைந்திடுங்கள்.
  • ஒரு மணி நேரத்திற்கு மாவை தனியாக அப்படியே விட்டுவிடுங்கள். மாவை நன்கு வெட்டி மூன்றாக பிரித்து கொள்ளுங்கள்.
  • ஒரு பகுதி மாவில் மூன்று சப்பாத்தி சைஸில் உருட்டி தேய்க்கவும். இதே போல மீதமுள்ள மாவையும் தேய்க்கவும்.
  • இப்போது சதுர வடிவில் கத்தி வைத்து மாவை வெட்டுங்கள். ஓரங்களில் மீதமாகும் மாவை அடுத்த மாவுடன் சேர்க்கவும்.
  • கடாயில் கடலெண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டிற்கு மாற்றி கொஞ்சம் சதுர வடிவில் வெட்டிய துண்டுகளை உள்ளே போட்டு வறுத்து எடுக்கவும்.
  • பட்டர் பிஸ்கட் நிறத்தில் வருவதற்கு சற்று முன்பாக எண்ணெயில் இருந்து எடுத்துவிடவும்.
  • சூடு குறைந்தவுடன் எடுத்து சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கு இந்த கலகலா எனும் மைதா பிஸ்கட் நிச்சயம் பிடிக்கும்.

மேலும் படிங்ககுஸ் குஸ் ரெசிபி : 10 நிமிடத்தில் செய்யக் கூடிய எளிதான காலை உணவு

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP