herzindagi
Main ct

Andhra Tomato Chutney : காரசாரமான ஆந்திரா அந்நியன் தக்காளி சட்னி

ஹெர் ஜிந்தகி வாசகர்களுக்காகவே குளிர்காலத்தில் நாக்கிற்கு காரசாரம் அளிக்ககூடிய ஆந்திரா ஸ்பெஷல் அந்நியன் தக்காளி சட்னிக்கான மேக்கிங்
Editorial
Updated:- 2023-12-20, 16:46 IST

குளிர்காலத்தில் காரசாரமான உணவுகளை நாம் விரும்புவது இயல்பே. தோசை, இட்லி ஆகியவற்றுக்கு தேங்காய் சட்னி, சாம்பார், புதினா சட்னி தொட்டு சாப்பிட்டு போர் அடித்திருக்கும். அதனால் வாசகர்களுக்கு ஸ்பெஷல் ஆந்திரா அந்நியன் தக்காளி சட்னியை எப்படி செய்வது என பகிர்ந்துள்ளோம்.

இதை அந்நியன் தக்காளி சட்னி எனக் குறிப்பிட காரணம் விக்ரம் அப்படத்தில் ஒரு சில விநாடிகளுக்குள் அம்பியாகவும், அந்நியனாகவும் மாறுவது போல் இந்தச் சட்னியை ஒரே நேரத்தில் தோசை, இட்லியுடன் தொட்டும் சாப்பிடலாம்…சாதத்துடன் பிரட்டியுடன் சாப்பிடலாம்…அவ்வளவு ருசியாக இருக்கும்

 ct

தேவையான பொருட்கள்

  1. பெங்களூரு தக்காளி 
  2. நல்லெண்ணெய் 
  3. காய்ந்த மிளகாய்
  4. சீரகம் 
  5. வெள்ளை எள் 
  6. உளுந்து 
  7. பூண்டு 
  8. கடுகு 
  9. பச்சை மிளகாய் 
  10. கறிவேப்பிலை 
  11. தண்ணீர் 

மேலும் படிங்க வாசகர்களுக்கான ஸ்பெஷல் தின்பண்டம் : மொறுமொறு பன்னீர் எள் பக்கோடா

அந்நியன் தக்காளி சட்னி செய்முறை 

 ct

  • முதலாவதாக ஒரு கடாயில் ஒன்றரை ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு அதில் 10 சிறிய காய்ந்த மிளகாய்கள், ஒரு ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் வெள்ளை எள், ஒரு கைபிடி அளவிற்கு உளுந்து போட்டு நன்கு வாட்டவும் 
  • அடுப்பில் தீயின் வேகத்தைக் குறைத்து இவற்றை வாட்டுவது நல்லது
  • தங்க பழுப்பு நிறம் வரும் வரை வாட்டுவதை தொடரவும்
  • அடுப்பை ஆஃப் செய்து விட்டு இவை ஆறியவுடன் மிக்ஸ்யில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்
  • மிக்ஸியில் அரைபடும் இடையேயும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ் பேஸ்ட்டாக மாற்றவும்
  • அதே கடாயில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு ஒரு ஸ்பூன் கடுகு சேர்க்கவும் 
  • கடுகு பொறிந்தவுடன் ஒரு கையில் பிடிபடும் பூண்டுகளை தோலுரித்து அதில் போடவும்
  • அடுத்ததாக எத்தனை தக்காளி பயன்படுத்தப் போகிறீர்களோ அந்த அளவிற்கு பச்சை மிளகாய் சேர்க்கவும். அதாவது ஆறு மீடியம் சைஸ் பெங்களூரு தக்காளிக்கு ஆறு பச்சை மிளகாய்
  • இதனுடன் தேவையான அளவு கறிவேப்பிலை சேர்க்கவும் 
  • தீயை குறைத்து இவை வறுபடும் வரை மற்றொரு பக்கம் தக்காளியை சிறிது சிறிதாக நறுக்குங்கள்
  • தற்போது வெட்டிய தக்காளிகள் அனைத்தையும் கடாயில் போடவும் 
  • தக்காளி நன்றாக வேகும் நேரத்தில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் 4-5 நிமிடங்களுக்கு வதக்கவும் 
  • தொக்கு போல் தெரிந்தவுடன் அடுப்பை ஆஃப் செய்து விடுங்கள்
  • சூடு ஆறிய பிறகு இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து 25 விநாடிகளுக்கு அரைக்கவும் 
  • இதன் பிறகு வேறொரு கடாயில் இரண்டரை ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் கடுகு போடவும்
  • கடுகு பொறிந்தவுடன் ஒன்றரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும் 
  • உளுத்தம் பருப்பு தங்க பழுப்பு நிறத்தில் மாறியவுடன் தேவையான அளவு கறிவேப்பிலை சேர்த்து முதலில் அரைத்து வைத்திருந்த பேஸ் பேஸ்ட்டை கொட்டவும்
  • மிக்ஸியில் ஒட்டியிருக்கும் கொஞ்சம் பேஸ்ட்டையும் எடுக்க கால் டம்ளர் தண்ணீர் பயன்படுத்துங்கள்
  • கடைசியாக அரைத்த தக்காளி பேஸ்ட்டை சேர்க்கவும்
  • மீண்டும் ஒரு கால் டம்பளர் தண்ணீர் சேர்த்திடுங்கள்

மேலும் படிங்க 20 ஸ்டெப் தான்! வீட்டிலேயே சுவையான பீட்சா ரெடி

இவை அனைத்தையும் நன்கு கிண்டி 2-3 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டால் சுவையான ஆந்திரா அந்நியன் தக்காளி சட்னி ரெடி 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com