Chia seed: அடர்த்தியான, ஆரோக்கியமான கூந்தலை பெற இரசாயனம் நிறைந்த பொருட்களை தேட வேண்டியதில்லை. சமீப காலங்களில், ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு பொருளாக சியா விதைகள் விளங்குகின்றன. இது உங்கள் கூந்தல் பராமரிப்புக்கு ஒரு வரப்பிரசாதமாக செயல்படுகிறது. சியா விதைகளின் ஜெல் போன்ற தன்மை, அதில் இருக்கும் புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை கூந்தலுக்கு ஊட்டமளித்து வளர்ச்சியை தூண்டுகின்றன.
மேலும் படிக்க: சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டுமா? இந்த 5 பழக்கங்களை தினசரி கடைபிடிக்கவும்
அதன்படி சியா விதைகளை கொண்டு ஐந்து விதமான ஹேர்பேக் தயாரித்து பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை இந்தக் குறிப்பில் காணலாம். இது உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
கற்றாழை என்பது ஒரு சிறந்த மருந்து. இதை சியா விதைகளுடன் சேர்த்து பயன்படுத்தும் போது, கூந்தலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன், ஈரப்பதத்தையும் உறுதி செய்கிறது. உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை குறைக்க கற்றாழை ஜெல் பயன்படுகிறது. மேலும், இது கூந்தல் வேர்களை பலப்படுத்துகிறது. எனவே, இவை இரண்டையும் சேர்த்து தலையில் தேய்த்து விட்டு சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் குளித்து விடலாம். இதன் மூலம் பொடுகு பிரச்சனையும் குறையும்.
கூந்தல் பராமரிப்பு முறைகளில் தேங்காய் எண்ணெய் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுவதற்கு ஒரு காரணம் உள்ளது. இது கூந்தலின் உள்ளே ஆழமாக ஊடுருவி, புரத இழப்பை குறைக்கிறது. அதிலுள்ள கொழுப்பு அமிலங்கள், சியா விதைகளிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துகளையும் கூந்தலுக்கு கிடைக்க வழிவகுக்கின்றன. வறண்ட, சேதமடைந்த கூந்தலுக்கு இது ஒரு சிறந்த ஊட்டச்சத்துக் கலவை. இது கூந்தலை உள்ளிருந்து பலப்படுத்துவதோடு, அதன் இயற்கையான பளபளப்பை மீட்டெடுக்கிறது.
மேலும் படிக்க: முடி உதிர்வை தடுத்து ஆரோக்கியமான கூந்தலை பெற எளிதான வழி; பூசணி விதை எண்ணெய்யை இப்படி பயன்படுத்தவும்
தயிரில் லாக்டிக் அமிலம், புரதம் மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன. இது உச்சந்தலையை சுத்தப்படுத்தி, முடியின் வேர்களை பலப்படுத்துகிறது. சியா விதைகளுடன் தயிரை சேர்க்கும் போது, இது ஒரு இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு, கூந்தலின் பளபளப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இந்த ஹேர்பேக்கையும் தொடர்ந்து பயன்படுத்தும் போது கூந்தலின் ஆரோக்கியம் மேம்படும்.
வெங்காய சாறின் வாசனை அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஆனால், முடி வளர்ச்சிக்கான அதன் பயன்கள் இன்றியமையாதவை. சல்பர் நிறைந்த வெங்காய சாறு, கொலஜன் உற்பத்தியை மேம்படுத்த உதவுகிறது மற்றும் புதிய முடி வளர்ச்சியை தூண்டுகிறது. சியா விதைகளுடன் இதை சேர்த்து பயன்படுத்தும் போது, இது உச்சந்தலையை மென்மையாகவும், அதிக ஈரப்பதத்துடனும் மாற்றும். இந்த ஹேர்பேக் முடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டச்சத்து அளித்து முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.
முடி உதிர்வை கட்டுப்படுத்த ஆயுர்வேத முறையில் நெல்லிக்காய் ஒரு அரிய பொக்கிஷம் ஆகும். இது வைட்டமின் சி மற்றும் அன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. சியா விதைகளுடன் சேர்த்து இதனை பயன்படுத்தும் போது, கொலஜன் உற்பத்தி அதிகரிக்கும். இந்த ஹேர்பேக், கூந்தலை அடர்த்தியாகவும், பளபளப்பாகவும், வலுவாகவும் மாற்றும்.
இந்த ஹேர்பேக்குகளில் உங்களுக்கு ஏற்றதை தேர்வு செய்து வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன்களை பெறலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com