இன்றைய நவீன உலகில், இளைஞர்களை அதிகம் கவலை கொள்ள வைக்கும் பிரச்சனையாக இளநரை மாறி இருக்கிறது. இதற்கு மன அழுத்தம், சரியான உணவு பழக்கம் இல்லாதது மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
மேலும் படிக்க: முடி உதிர்வா? கவலை வேண்டாம், உங்கள் கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் சூப்பர் உணவுகள்!
இளம் வயதில் ஏற்படும் இந்த நரை முடியை மறைப்பதற்கு இரசாயனம் கலந்த செயற்கை ஹேர் டை பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை தற்காலிகமாக முடியைக் கருமையாக்கினாலும், பல்வேறு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும்.
எனவே, உங்கள் வாழ்க்கை முறையில் சில ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை சேர்த்துக் கொள்வதும், சில எளிய வீட்டு வைத்தியங்களை முயற்சிப்பதும் நல்ல பலன்களை தரும். வழக்கமாக பயன்படுத்தும் எண்ணெய்யின் மூலம் எப்படி நரை முடியை எதிர்கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கடுகு எண்ணெய் - ஒரு கப்,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன் மற்றும்
நெல்லிக்காய் பொடி - ஒரு டீஸ்பூன்.
மேலும் படிக்க: Hair care tips: முடி உதிர்வை தடுக்க அரிசி வடித்த நீர்; இப்படி யூஸ் பண்ணா பெஸ்ட் ரிசல்ட் கிடைக்கும்
முதலில் ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெய்யை ஊற்றி சூடாக்கவும். இந்த எண்ணெய் சூடானதும், அதில் வெந்தயம் மற்றும் நெல்லிக்காய் பொடியை சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை மிதமான சூட்டில், எண்ணெய் கருப்பு நிறமாக மாறும் வரை சுமார் ஐந்து நிமிடங்கள் கலக்க வேண்டும். இதற்கடுத்து, அடுப்பை அணைத்து விட்டு எண்ணெய்யை ஆற விடவும். பின்பு, எண்ணெய் ஆறியதும் அதை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
தலைக்கு குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், இந்த எண்ணெய்யை உங்கள் உச்சந்தலையில் தடவி, 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்யவும். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, அதிக இரசாயனம் இல்லாத ஷாம்பு கொண்டு தலைக்கு குளித்து விடலாம். இதன் பின்னர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமும் கிடையாது.
இந்த எண்ணெய்யை கொண்டு வாரத்திற்கு மூன்று முறை உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்து வந்தால், முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து, படிப்படியாக முடி கருமையாகவும், அடர்த்தியாகவும், மென்மையாகவும் மாறும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com