கடை சுவையையே தோற்கடிக்கும் ஒரு சிக்கன் மசாலா! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஹோட்டல் சுவையை மிஞ்சும் அளவுக்கு சிக்கன் மசாலாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை நாம் இந்த பதிவில் படித்தறியலாம்.

chicken masala big

ஞாயிற்றுக்கிழமை என்றாலே நம் வீட்டில் பெரும்பாலும் அசைவ உணவாக இருக்கும். அப்பா, காலையிலேயே கறிக்கடைக்கு போய் சிக்கன் வாங்கி வருவதை வழக்கமாக வைத்திருப்பார். அம்மா, சிக்கனை மசாலா தடவி வைத்தது முதலே எப்போது சமையல் ரெடி ஆகும் என நாம் நச்சரிக்கவும் செய்வோம். இது தான் பல பேருடைய வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக நடக்கும் நிகழ்வாகும்.

இன்று பலர் ரெடிமேட் சிக்கன் மசாலாவை கடையில் வாங்கி சீக்கிரமே சமையலை முடித்துவிடுகின்றனர். இதன் காரணமாகவே, நம்மால் சுவையான அசைவ உணவை வீட்டிலும் செய்து சாப்பிட முடிவதில்லை.

chicken masala

இன்றும் நாம் மசாலா அரைத்து வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டால், அதன் சுவையே வேறு. நிச்சயம், அது நம்முடைய சமையலின் சுவையையும் ஆரோக்கியத்தையும் கூட்டும். நாம் தாளிக்கும் பொருட்களில் கவனம் செலுத்தினாலே போதும். அது நமக்கு சுவையை கொடுக்கும்.

எனவே, வீட்டிலேயே நாம் ஏன் அரைத்து சிக்கன் மசாலாவை தயார் செய்ய கூடாது! எப்போதெல்லாம் அசைவ உணவை சமைக்கிறீர்களோ, அப்போது இது போன்று மசாலாக்களை அரைத்து சேர்க்கலாமே. இப்போது இந்த பதிவின் மூலம் சிக்கன் மசாலாவை முறைப்படி எப்படி செய்து சுவைக்கலாம் என நாம் பார்ப்போம் வாருங்கள்.

சிக்கன் மசாலா என்பது என்ன?

chicken masala

கரம் மசாலா அல்லது மற்ற மசாலா பொருட்களை நாம் எப்படி தயாரிப்போமோ, அப்படி தான் இதையும் செய்ய வேண்டும். சிக்கன் மசாலா, நம்முடைய அசைவ உணவை சுவையாக மாற்றுகிறது. இது குழம்புக்கு சுவையை சேர்க்கிறது. குறிப்பாக, சில அசைவ உணவுகளில் மட்டுமே சேர்க்கப்படுகிறது. இந்த சிக்கன் மசாலாவை தயாரிக்க நமக்கு பலவித உணவுப்பொருட்கள் தேவைப்படுகிறது.

சிக்கன் மசாலா செய்ய தேவையான பொருட்கள்

சிக்கன் மசாலாவை வீட்டிலேயே நாம் தயாரிக்க 10 முதல் 12 பொருட்கள் தேவைப்படுகிறது. இவை அனைத்துமே நம் வீட்டு சமையலறையில் எளிதில் கிடைக்கக்கூடியவையே.

  • முழு கொத்தமல்லி - 100 கிராம்
  • பட்டை மிளகாய் - 1 கப்
  • கருமிளகு - 2 டேபிள்ஸ்பூன்
  • சோம்பு - 1 டேபிள்ஸ்பூன்
  • சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
  • வெள்ளை அரிசி - 1 டேபிள்ஸ்பூன்
  • ஏலக்காய் - 5 முதல் 7
  • கசகசா - 1 டீஸ்பூன்
  • கருவேப்பிலை - 10 முதல் 12 இலைகள்
  • மஞ்சள் - 1 (சிறிய துண்டு)
  • பிரியாணி இலை - 2 முதல் 3
  • அன்னாசிப்பூ - 2
  • இலவங்கப்பட்டை - 1 துண்டு
  • கிராம்பு - 5
  • கல்பாசி - 3
  • கல் உப்பு - 1 டீஸ்பூன்

செய்வது எப்படி?

chicken masala

  • முதலில் கடாயில் பட்டை மிளகாயை போடவும். 2 முதல் 3 நிமிடங்களுக்கு நன்றாக வறுக்கவும். பட்டை மிளகாயின் நிறம் மெல்ல மாறும். மேலும், வாசனையும் வரும். இதனை ஒரு பிளேட்டுக்கு மாற்றிக்கொள்ளவும்.
  • பிறகு, கடாயில் அதேபோல அரிசியை நன்றாக வறுக்கவும். இவ்வாறு வறுக்கும்போது, வாசனை வரும். அப்படி வருமெனில், நன்றாக வறுபட்டுவிட்டது என அர்த்தம். இதையும் பட்டை மிளகாய் வைத்திருக்கும் பிளேட்டிற்கு மாற்றிக்கொள்ளவும்.
  • இவ்வாறு ஒவ்வொரு மசாலா பொருளாக வறுக்கவும். கொத்தமல்லி, கருமிளகு, சோம்பு, சீரகம், கசகசா, கருவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியாக வறுக்கவும். பிரியாணி இலை, அன்னாசிப்பூ, இலவங்கம், கிராம்பு, கல்பாசி ஆகியவற்றை சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
  • பிறகு இவற்றை ஆற விடவும். அனைத்தையும் மிக்சிக்கு மாற்றிக்கொள்ளவும். சுவைக்கு தேவையான அளவு உப்பினை இதோடு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • ஒரு முறை அரைத்த உடன், மூடியை கழற்றி ஸ்பூனால் கிண்டி பார்க்கவும். பிறகு மீண்டும் அனைத்தையும் அரைத்து நன்றாக பொடியாக்கி கொள்ளவும்.
  • அவ்வளவு தான் உங்களுடைய சுவையான சிக்கன் மசாலா இதோ ரெடி. இதனை காற்றுப்புகாத டப்பாவில் மூடி வைக்கவும்.

சேமித்து வைப்பது எப்படி?

chicken masala

  • அடிப்படையாகவே நாம் அடைத்து வைக்கும் விதம் என்பது தான் மிகவும் முக்கியம். ஒருவேளை ஈரப்பதம் உள்ளே சென்றுவிட்டால், அது நம்முடைய மசாலாவை டப்பாவில் படிய செய்து பாழாக்கிவிடும்.
  • இதனை தயாரிக்கும்போது, தேவையான பொருட்கள் அனைத்தையும் அருகில் வைத்துக்கொள்வது நல்லது. ஆனால், இவற்றை கேஸ் அடுப்பின் அருகில் வைத்துவிட கூடாது. இல்லையேல், மசாலாவில் ஈரப்பதம் தங்கி சுவையை பாழாக்கி விடும்.
  • சிலர் மசாலா டப்பாவை ஃபிரிட்ஜில் வைப்பதால் அது கெட்டு போகாது என நினைக்கின்றனர். ஆனால், ஃபிரிட்ஜில் வைக்கும்போது ஈரப்பதம் உண்டாகும். ஒருவேளை கொஞ்சம் கூட காற்றுப்புகாது என்று உறுதியாக தெரிந்தால், அப்போது ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.

இனிமேல் உங்கள் வீட்டில் சிக்கன் என்றால், இது போல சுவையாக மசாலாவை அரைத்து தானே சமையல் செய்வீர்கள்! செயற்கை மசாலாவை இனிமேல் தேட மாட்டீர்கள் தானே! இது உங்களுடைய அசைவ உணவை மேலும் அருமையாக மாற்றும் என்பதை மறவாதீர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், லைக் செய்யவும், ஷேர் செய்யவும், கமெண்ட் செய்யவும். மேலும், ஹெர்ஷிந்தகி பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credits:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP