Sathu Maavu kozhukattai : 10 நிமிஷம் போதும், விநாயகர் சதுர்த்திக்கு இப்படி ஹெல்த்தியா கொழுக்கட்டை செஞ்சு சாப்பிடுங்க!

வரவிருக்கும் விநாயகர் சதுர்த்திக்கு இந்த ஹெல்த்தியான சத்துமாவு கொழுக்கட்டை செய்து இறைவனை வழிப்படுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் பெருகட்டும்…

vinayagar chadurthi recipe
vinayagar chadurthi recipe

எப்படா விநாயகர் சதுர்த்தி வரும், கொழுக்கட்டை சாப்பிடலாம் என்று வருடம் முழுவதும் காத்திருக்கும் கொழுக்கட்டை ரசிகையா நீங்கள்? அதிலும் பூரண கொழுக்கட்டை சாப்பிட ஒரு வருஷம் எல்லாம் காத்திருப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம்ங்க. திருமணம், குழந்தைகள் என்று ஆன பிறகு சமையல் எல்லாம் பழகிய பிறகு கொழுக்கட்டை ஞாபகம் வரும் பொழுதெல்லாம் விதவிதமாக கொழுக்கட்டை செய்து சாப்பிடுகிறேன். ஒரே மாதிரி சாப்பிட்டா போர் அடித்து விடும் இல்லையா?

உங்களுக்கும் கொழுக்கட்டை பிடிக்கும் என்றால், ஏதாவது வித்தியாசமான ஹெல்த்தியான கொழுக்கட்டையை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டால், இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள சத்துமாவு கொழுக்கட்டையை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். இந்த கொழுக்கட்டையை நிஜமாகவே 10-15 நிமிஷத்தில் செய்திடலாம். இது என் குழந்தைகளுடைய ஸ்நாக்ஸ் பாக்ஸ் ரெசிபி. சத்துமாவு கஞ்சி குடிக்க அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி கொழுக்கட்டை செய்து கொடுங்கள். கண்டிப்பா அடிக்கடி செய்ய சொல்லி கேட்பாங்க. சத்துமாவு கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

sathumavu kozhukattai

  • சத்துமாவு - 1 கப்
  • அவல் - ¼ கப்
  • தேங்காய் - 2 பெரிய துண்டுகள்
  • ஏலக்காய் - 2
  • நாட்டு சர்க்கரை - ½ கப்
  • நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

vinayagar chaturdhi sathumavu kozhukatti

இந்தக் கொழுக்கட்டை செய்வதற்கு இனிப்பு இல்லாத சத்து மாவை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களிடம் அரசாங்கம் கொடுக்கும் இனிப்பு சேர்த்த சத்து மாவு இருந்தால் தனியாக இனிப்பு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த சத்து மாவிலும் இந்த கொழுக்கட்டையை செய்ய முடியும். சத்து மாவிற்கு பதிலாக ராகி அல்லது ஏதேனும் சிறுதானிய மாவிலும் இதே அளவுகளை பின்பற்றி கொழுக்கட்டை செய்யலாம்.

  • முதலில் ஒரு மிக்ஸர் ஜாரில் அவல் மற்றும் ஏலக்காய் சேர்த்து பொடித்து கொள்ளவும்.
  • இதனுடன் தேங்காய் துண்டுகளை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  • அரைத்த கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
  • இதனுடன் சத்துமாவு, நாட்டு சர்க்கரை, நெய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும்.
  • தேங்காய், நாட்டு சர்க்கரை, மாவு எல்லாம் ஒன்று சேர்ந்து நன்கு கலக்க வேண்டும்.
  • கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து, கொழுக்கட்டை பிடிக்கும் பதம் வரும் அளவிற்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீரை ஒரே சமயத்தில் அதிகமாக சேர்த்து விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக கவனமாக சேர்க்கவும்.
  • இந்த கொழுக்கட்டை செய்வதற்கு சூடான தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண நீரை பயன்படுத்தினால் போதுமானது.
  • தயாராக வைத்துள்ள மாவை பிடி கொழுக்கட்டை போல பிடித்து வைக்கவும்.
  • பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமரில் 10 நிமிடத்திற்கு வேகவைத்து கொள்ளவும்.
  • சுவை மற்றும் சத்துக்கள் நிறைந்த இந்த கொழுக்கட்டையை இந்த விநாயகர் சதுர்த்திக்கு நீங்களும் செய்து குடும்பத்துடன் உண்டு மகிழுங்கள். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

இந்த பதிவும் உதவலாம்: 3 விதமான காலை உணவுக்கு ஒரே ஒரு ப்ரீ மிக்ஸ் போதும்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP