கண்ணுக்கு மை அழகு என்ற கூற்றிற்கு ஏற்ப தான் கண் மை கண்களில் தீட்டும் ஒவ்வொரு பெண்களும் பார்ப்பதற்கு மிகவும் அழகாகத் தெரிவார்கள். பெண்கள் மட்டுமல்ல பிறந்த குழந்தைகளுக்கு வைக்கும் கண் மை அவர்களுக்கு அழகை சேர்ப்பது மட்டுமல்ல அவர்களின் திருஷ்டியைப் போக்கிறது என்ற நம்பிக்கை பெற்றோர்களிடம் அதிகளவில் உள்ளது. இதற்காக கடைகளில் விற்பனை செய்யும் கெமிக்கல் நிறைந்த கண் மைகளை வாங்கித் தான் உபயோகிக்க வேண்டும் என்றில்லை. அதற்கு மாற்றாக வீட்டிலேயே சில பொருட்களைப் பயன்படுத்தி கண் மை தயார் செய்ய முடியும். எப்படி? என்பது குறித்த சில டிப்ஸ்கள் இங்கே.
மேலும் படிக்க: குழந்தை வளர்ப்பு கடினமாக இருக்கிறதா? பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய 5 அடிப்படை அம்சங்கள்
கண்களுக்கு அழகுக்கூட்டும் கண் மை வீட்டில் தயார் செய்வதற்கு முதலில் வசம்பு எடுத்துக் கொள்ளவும். இதைத் தீயில் வாட்டிக் கொள்ளவும். பின்னர் இதை கரித்தூளாக்கிக் கொண்டு சிறிதளவு விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கினால் போதும் கண் ரெடி. இதை தினமும் நெற்றியில் வைக்கும் போது அலர்ஜிஈ அரிப்பு போன்ற எவ்வித பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பில்லை.
குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் செய்யக்கூடிய கண் மைக்கு பாதாம் பருப்புகளைப் பயன்படுத்தலாம். இரண்டு பாதாம்களை எடுத்து தீயில் வைத்து நன்றாக கரிக்கிக் கொள்ள வேண்டும். இதன் பின்னதாக இதை பொடியாக்கிக் கொண்டு ஒரு சிறிய பவுலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த பொடியை தேங்காய் எண்ணெய் கலந்துக் கொண்டால் போதும் இயற்கையான முறையில் தயார் செய்யும் கண் இமை ரெடி. இதுபோன்ற முறைகளில் பின்பற்றி வீட்டிலேயே இயற்கையான முறையில் கண் மைகள் தயாரித்துப் பயன்படுத்தலாம். இந்த கண் மை வைக்கும் பழக்கம் என்பது கலாச்சார அடையாளமாகவும், மக்கள் மனங்களில் பாதுகாப்பை உணர்வைத் தரக்கூடியதாகவும் உள்ளது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com