herzindagi
Main milagu

Pepper Gravy Recipe :குளிர்காலத்திற்கு உகந்த ருசியான மிளகு குழம்பு!

குளிர்காலத்திற்கு உகந்த மிளகு குழம்பு செய்வது எப்படி? இந்த கட்டுரையின் வழியாக தெரிந்துகொள்ளுங்கள்.
Editorial
Updated:- 2024-01-07, 22:03 IST

குளிர்காலத்தில் எப்போதுமே சூடான அல்லது காரசார உணவுகளைச் சாப்பிட நாம் விரும்புவோம். சூடான சாதத்தின் மீது மிளகு குழம்பு ஊற்றிச் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். குளிர்காலத்தில் சத்தான உணவாகவும் மிளகு குழம்பு விளங்குகிறது. ஏனென்றால் மிளகு குழம்பு வெப்பம் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அளித்து குளிர்ச்சியிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. இதன் செய்முறையை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

 milagu

தேவையான பொருட்கள்

  1. 40 கிராம் புளி 
  2. 50 கிராம் பூண்டு 
  3. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. கறிவேப்பிலை
  5. தேவையான அளவு உப்பு
  6. மூன்று ஸ்பூன் மிளகு
  7. கொத்தமல்லி 
  8. இரண்டு ஸ்பூன் துவரம் பருப்பு 
  9. 4-5 காய்ந்த மிளகாய் 
  10. எள் எண்ணெய் 
  11. நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் 
  12. கடுகு 
  13. வெந்தயம்

மிளகு குழம்பு செய்முறை 

  • ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் மூன்று ஸ்பூன் மிளகு, கொத்தமல்லி, இரண்டு ஸ்பூன் துவரம் பருப்பு, கிராம்பு, 4-5 காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வறுக்கவும். 
  • அதன் பிறகு ஒரு பேனில் கறிவேப்பிலை இலைகள் போட்டு வதக்கவும். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அதிகமாக வதக்கி கறிவேப்பிலை இலைகளைக் கறுக்கி விட வேண்டாம்.
  • இவை அனைத்தும் நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்துப் பொடியாக்கி விடுங்கள்.
  • மிளகு குழம்பு செய்வதற்கு புளி தண்ணீரை தயாரித்து கொள்ளவும்.
  • இப்போது ஒரு பெரிய கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.
  • அதில் கடுகு போடுங்கள், கடுகு வெடித்து சிதறியவுடன் வெந்தயம் சேர்க்கவும்.
  • அதோடு காய்ந்த மிளகாய், உரித்த பூண்டு சேர்த்து ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • இப்போது புளி தண்ணீர், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்க்கவும். குமிழிகள் தோன்றும் வரை நன்கு கொதிக்க விடவும்.
  • தீயின் வேகத்தைக் குறைத்து மிளகு குழம்பு கெட்டியாகும் வரை சூடுபடுத்தவும்.
  • குழம்பிலிருந்து எண்ணெய் பிரியும்போது சூடுபடுத்துவதை நிறுத்திவிடுங்கள்.

 milagu

அவ்வளவு தான். ஆரோக்கியமான மற்றும் சுவையான மிளகு குழம்பு தயார். சூடான சாதத்தின் மீது மிளகு குழம்பு ஊற்றி அனைவருக்கும் பரிமாறுங்கள். இதனைப் பிரிட்ஜில் வைத்து ஒரு வாரத்திற்கு கூட பயன்படுத்தலாம். மிளகு குழம்பு எளிதில் கெட்டுப் போகாது.

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com